நான் உன்னை காதலிக்கிரேன்

தலைவன்:
நான் ஆண் என்பதை நீ அறிவாய்
நீ பெண் என்பதை நான் அறிவேன்
உன் பெண்மயதை அறிந்தபின் நான்
பித்தானதை அரிந்துகொள்வாய் காதலியே....

பொன்பாதம் நடந்துசெல்லும்
பாதையெல்லாம் பிந்தொடர்ந்து
பேருந்து நிருத்ததில் நேரம் காலம்
தவறாமல் காத்துக்கிடந்தேன் கண்மனியே....

தலைவி:
கடந்துபோகும் பொழுதுகளில்
காண்கிராய் என நானிருந்தேன்
என் குடியிருப்பு தெருவெல்லாம்
தனித்து நீ திரிகையிலுன்னை
தெரிந்து கொண்டேன் ஜன்னல் வழி

புரம் வந்த ஆண்மகனே
உன் பெயர்கூட தெரியாமல்
பித்தான கதையெல்லாம்
பெண்மை நான் எங்கு காண

தலைவன்:
காதலுக்கு முதல் படியாய்
கவிதையெல்லாம் கடந்தபின்தான்
என்னவளே எப்போதும் ஏங்கவைத்து வதைப்பதை
எப்படியோ அறிந்துகொண்டேன்...

இப்படியே விட்டுவிட்டால்
பித்தெனக்கு முற்றிவிடும்
பின் உனக்கே தொல்லையென
முன் வந்து சொல்லிவிட்டேன்.....

தலைவி:
முன்வந்து முகம்பார்த்து காதல் விளிக்கும் காலையனே
கைகோர்த்து நடந்துபின் தெரியாமல் தோளுரசி
நாளெல்லாம் கைபேசி நகம் கூட வலிகொள்ள
குருந்தகவல் கூத்தாடி

இருசக்கர வாகனத்தில்
இருக்கியனைத்து பயணம்செய்யும்
இருபதாம் நூற்றாண்டு காதலெல்லாம்
இம்மியும் எனக்கு விருப்பமில்லை

தலைவன்:
கல்யாண தேதி வரை கனவில் விரல்கோர்க்க
அனுமதித்தால் போதும் அன்பே
கண்ணிமைத்து கட்டளை இடு
கவரிவீசி கைக்கட்டி காவலனாய் காத்திருப்பேன்......

உன் சிலையழகில் சில நேரம்
மூர்ச்சையடைய நேரிட்டால்
கேசம் தீண்டும் காற்றை மட்டும்
சுவாசிக்க சுதந்திரம் கொடு.....

தலைவி:
தலைவலிக்குத் தேனீரும்
தேனீருக்கு புகையிலைத் தோழமையும்
தேடும் ஆணாய் நீ இருந்தால்
அப்படியே சென்றிடலாம்...

உல்லாச விழா ஒப்பனைக்கும்
மனவேதனை மறப்பதற்கும்
மதுவினை நீ மணந்தவனா??
மேலும் பேச ஏதுமில்லை....

தனிமை கொண்ட நேரங்களில்
தனியாய் ஒருத்தி தேவைப்பட்டால்
தலைகுணிந்து நிற்பதர்க்கும்
தகுதி உனக்கு கிடைக்காது....

தலைவன்:
என் தேவதை வாழும் மூச்சினிலே
புழுதியை புழங்க விடுவேனா??
சிதைவுற்று பிறப்பொக்கும் அணுவிலெல்லாம்
அன்னமே உன் பெயர் இருக்கயிலே
மதுவை எங்கனம் கலந்திடுவேன்??

தனிமை கொள்ளும் தருனங்களில்
தாரகை நினைவு துணையிருக்க
தனியொருத்தி
தேடிடும் தேவைகள் ஏதுமில்லை....

தலைவி:
கட்டுப்பாடுகள் ஏற்றுப்பின் காதலனாய் வாழ்ந்துவிட்டு
பெற்றோரின் பெருமையென பலசாதி பெயர்சொல்லி
பிரிந்துவிட நேரிட்டால்
அழுதுதீர்க்கும் அடிமைகுல பெண்ணல்ல நான்....

பொன்னள்ளி கொடுத்தால் தான்
பூ மாலை தோள் சேரும்
புதுப்பிச்சை பழக்கமெல்லாம் புகல்ந்திட்டால்
கண்டவிடம் தண்டனைதான்

தலைவன்:
வாழ்வைதரும் பெண்ணிடத்தில்
வரதட்ஷனை கேட்டு நிர்க்கும்
வெட்கம் கெட்ட ஆணென்று
எண்ணிவிட வேண்டாம்

விதியென்று உனைவிட்டு
வேரொருத்தி மணம்கொல்லும்
வழுவிழந்த கோழையல்ல
நான்....

தலைவி:
உன் காதல் கொண்ட கர்வத்தால்
கண்ணியெனை வென்றுவிட்டாய்

கள்வனே...
நீ கொள்ளையிட்டதன் கனக்குகள் கண்களிலும்
கல்யாண சத்திரம் அருகிலும் தான் உள்ளது
உனக்கான தண்டனை மிக விரைவில்....

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (3-Sep-13, 10:12 pm)
பார்வை : 196

மேலே