கல்பனா ரவீந்திரகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கல்பனா ரவீந்திரகுமார்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  28-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Apr-2013
பார்த்தவர்கள்:  547
புள்ளி:  126

என்னைப் பற்றி...

வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ !

என் படைப்புகள்
கல்பனா ரவீந்திரகுமார் செய்திகள்
கல்பனா ரவீந்திரகுமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2016 11:27 pm


​( இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் காலையில் நடந்த இந்த இளம் பெண்ணின் கொடூரக் கொலையை பத்திரிகைகள் , ஊடகங்கள் வாயிலாகக்  கண்டதும் அதிர்ச்சி அடைந்தேன்.

கடந்த 48 மணி நேரமாக சரியாக சாப்பிடவோ தூங்கிடவோ முடியவில்லை. உண்மைக் காரணமும் , நோக்கமும் , கொலையாளி எவரென்றும் இதுவரை ஒரு துப்பும் கிடைக்காத அளவில் ஏகப்பட்ட சந்தேகங்கள் , பேச்சுக்கள்,  குற்றங்கள் குறைகள் கூறுதல் என்று பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த அரசியல்கட்சிகளோ  அரசாங்கமோ ​இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொண்டு போராட தயாராகவில்லை என்பதுதான் மிக்க வருத்தம் . 


படங்களை பார்க்கும் நமக்கே குலை நடுங்குது ....இதயம் வெடிக்கது ....துக்கம் அழுகையாக வெடிக்கிறது . ஆனால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை நினைத்தால் சோகம் பன்மடங்கு கூடுகிறது . நம் குருதி கொதிக்கிறது . எங்கே உள்ளது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு ....மக்களுக்கு அடிப்படைத் தேவையான பாதுகாப்பு .....யாரும்  சிந்திக்கவே இல்லை அதை பற்றி. அனைத்திற்கும் சாதி மதம் அரசியல் என்று வண்ணம் பூசி எண்ணத்தை கூறி மேலும் குழூப்புவதும் குறை கூறுவதும் தான் நடக்கிறது ...பத்திரிகைகளிலும்  ஊடகங்களிலும் . 

சுற்றி இருந்தவர்களில் ஒருவருக்கும்  தைரியம் வரவில்லையா .....வாய்ப்பேச்சால்லாம் ஒன்றும் எடுபடலை ...வீரத்தை காட்டவில்லை . துணிவில்லை ஒருவருக்கும் . இதில் கூடவா ஒன்றாக இணைந்து  செயல்பட தோன்றவில்லை ????  அதைவிட கொடுமை அந்த உடல் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அப்படியே அந்த நிலையிலே இருந்ததை நினைத்தால் வயிறு எரிகிறது. அந்த மாதிரி சட்டம் நமக்கு தேவையில்லை. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றுகூடி கலந்திந்து ஒரு தீர்க்க சட்ட திருத்த முடிவினை எடுத்து வர வேண்டும் . 

அடிப்படை காரணம் , ரயில் நிலையங்களிலும் பொது  இடங்களிலும் பாதுகாப்பிற்க்காக எந்த ஒரு நடந்தவடைக்கையும் இதுவரை எடுக்கவும் இல்லை முயற்சிக்கவும் இல்லை . ஆயிரமாயிரம் எண்ணங்களுடன் எதிர்ப்பார்ப்புகளுடன் மிகப்பெரிய கனவுகளுடன் மனதில் கொண்டு வாழ்ந்த இந்த இளம்பெண் " ஸ்வாதி " நெஞ்சத்தில் இருந்தவை தெரியாது. அத்தனையும் ஒரு நொடியில் கருகி விட்டது . இதுபோல தொடர்ந்து தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகளும் , பழிவாங்கும் படலங்களும் , வஞ்சம் தேரர்க்கும் நஞ்சு எண்ணம்  கொண்ட கொடுமையான செயல்களும்  மேலும் மேலும் விரிந்து கொண்டே  போகிறது. அப்படி எனில் மக்களின் நிலை என்ன ...பாகுகாப்புக்கு வழி என்ன

 ....மேலும் பல "ஸ்வாதி" களின் நிலை நடவாமல் அதோடு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு அனைவரும் இணைந்து கலந்து ஆலோசித்து வாழ வழி வகைகள் செய்திட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் ஒரே வேண்டுகோள் ஆகும் . சிந்திக்க வேண்டியவர்கள் செய்வார்களா ...செயலாற்றுவார்களா ...என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. பூத்துக் குலுங்க வேண்டிய ஒரு மலர் , மொட்டிலேயே அழிக்கப்பட்டுவிட்டது . கண்ணீர் பெருகுகிறது . நம்மால் அவர்கள் தாய் தந்தையருக்கு ஆறுதலும் கூற முடியாமல் வெட்கி தலை குனிய வேண்டிய நிலையில் உள்ளோம். 

காவல்துறை மிகவும் வேகமாக செயல்பட்டு கொலையாளியை கண்டுபிடித்து உச்ச தண்டனையாக தூக்கு தணடனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நிறைவேறுமா ...??????

​தமிழ்நாடு அரசும் இரயில்வே நிர்வாக காவல்துறையும் இணைந்து மிக வேகமாக செயல்பட்டால் குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்கும் என்பது அனைவரின்  எண்ணம் . அவா . ​
என்னதான் இருந்தாலும் மீண்டும்தான் பார்ப்போமா அந்த இளம் அறிவு ஜீவியை ....அந்த இரக்கமிகு இதயத்தை ....மதிப்பில்லாத ஓர் உயிரை ....அந்த குடுபத்தின் குலவிளக்கை .....
கண்ணீர்த் துளிகளுடன் எந்தன் அஞ்சலி 

       பழனி குமார்               Palani Kumar N R  

மேலும்

உங்கள் எண்ணம் மிகவும் சரியானது. உண்மைதான் அரசு சார்பில் ஒருவரும் வருத்தம் அளிக்கிறது என்று கூட தெரிவிக்கவில்லை. அதிர்ச்சி அளிக்கிறது. இன்று காலை ஒரு கவிதை பதிவு செய்துள்ளேன். 28-Jun-2016 9:51 am
நீக்கி விட்டேன். மன்னிக்கவும் 28-Jun-2016 9:47 am
நன்றி ... பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு ஐயா அதை பார்க்கும் அளவு துணிவு எனக்கு இல்லை. 28-Jun-2016 9:24 am
இந்த கொலையில் மதம் சாதி என்று பூச்சுகள் வருவதற்கு அரசும் ஒரு காரணமாக தான் பார்க்கிறேன் ... சிறுபான்மை பெண்களுக்கு ஒரு அநீதி நடக்குமானால் அதை கண்டித்து சிறுபான்மை இயக்கம் முற்போக்கு இயக்கம் மற்றும் அரசு முதலில் ஒரு கண்டன அறிக்கை விடும் .. ஆனால் இந்த கொலையில் எந்த அறிக்கையும் வந்ததாக தெரியவில்லை ... அந்த மனநிலையே இது போன்ற மத சாதி வேறுபாடுகளை கேள்வி கேட்கிறது அரசாங்கத்தின் சார்பில் இதுவரை ஆறுதல் அளிப்பதாக அந்த பெண்ணின் வீட்டிற்கோ அல்லது அறிக்கையோ வெளிவரவில்லை ... ஜெயலலிதா அரசாங்கம் மனசாட்சியுடன் நடந்துகொள்ளவேண்டும் 28-Jun-2016 8:37 am
கல்பனா ரவீந்திரகுமார் - ஜோபி ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2016 11:36 pm

வந்தேன் என் அழகின் படைப்பு திறனை பார்க்க
விழுந்தேன் அவளின் கற்பனையை பார்த்து 'எழுத்து' டாட் காமில்
அவளின் அழகிய படைப்புக்களை பின்தொடர.

மேலும்

தொடருங்கள் கவிதைகளை மட்டும் :-) வாழ்த்துக்கள் தோழரே 26-Jun-2016 7:19 pm
தொடரட்டும் உமது பயணம் வாழ்த்துக்கள் .... 21-Jun-2016 8:27 am
இனிமையான பயணத்தை தொடருங்கள் 21-Jun-2016 5:37 am

விலை உயர்ந்த பட்டாடையில்
பட்டுவிட்ட தேநீர் கறை அவள்

தாயும் தாரமும் என்னை
கொண்டாடும் தருணங்களில்
பெண்ணிடம் பழகுவதை கற்றுத்தந்து
என் குணமற்ற குறைகளெல்லாம் பூர்த்தி செய்து
செரிக்காமல் நெஞ்சை
உறுத்தும் ஒருத்தி உண்டென்பதை காண
வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை..

என் மகளின் மண நாள் அன்று
மருமகனிடம் சொல்கிறேன்
"பாத்துக்கோங்க தம்பி
செல்லமா வளர்ந்த பொண்ணு"
அவளும் செல்லமாகவே வளர்க்கப்பட்டாள்
அவரும் செல்லமாகவே வளர்த்திருப்பார்
அடங்காத வலியை
அன்றொரு நாள்
இன்னொரு தகப்பனுக்கு
அன்பளிப்பாய் அளித்து வந்த கதையை
யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை...

கடைசியாய் ஒரு நாள்
"என் க

மேலும்

நன்றி தோழமையே 26-Jun-2016 7:12 pm
உண்மைதான்..மனம் என்பதும் செய்த பிழையை என்றும் சுட்டிக் காட்டிக் கொண்ட இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jun-2016 5:39 am
உண்மையான நேசங்கள் உறுத்தல்களை புரிந்துக் கொள்ளும். வாழ்த்துக்கள்.... 25-Jun-2016 7:05 pm
கல்பனா ரவீந்திரகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2016 5:20 pm

விலை உயர்ந்த பட்டாடையில்
பட்டுவிட்ட தேநீர் கறை அவள்

தாயும் தாரமும் என்னை
கொண்டாடும் தருணங்களில்
பெண்ணிடம் பழகுவதை கற்றுத்தந்து
என் குணமற்ற குறைகளெல்லாம் பூர்த்தி செய்து
செரிக்காமல் நெஞ்சை
உறுத்தும் ஒருத்தி உண்டென்பதை காண
வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை..

என் மகளின் மண நாள் அன்று
மருமகனிடம் சொல்கிறேன்
"பாத்துக்கோங்க தம்பி
செல்லமா வளர்ந்த பொண்ணு"
அவளும் செல்லமாகவே வளர்க்கப்பட்டாள்
அவரும் செல்லமாகவே வளர்த்திருப்பார்
அடங்காத வலியை
அன்றொரு நாள்
இன்னொரு தகப்பனுக்கு
அன்பளிப்பாய் அளித்து வந்த கதையை
யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை...

கடைசியாய் ஒரு நாள்
"என் க

மேலும்

நன்றி தோழமையே 26-Jun-2016 7:12 pm
உண்மைதான்..மனம் என்பதும் செய்த பிழையை என்றும் சுட்டிக் காட்டிக் கொண்ட இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jun-2016 5:39 am
உண்மையான நேசங்கள் உறுத்தல்களை புரிந்துக் கொள்ளும். வாழ்த்துக்கள்.... 25-Jun-2016 7:05 pm
கல்பனா ரவீந்திரகுமார் - புவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2016 6:27 pm

பண மாலை கண்டாலும் பெருமாள் கடனாளி இனமே …
நீ ஒரு வேலை உண்டாலும் கடனில்லா இனமே …
கல்யாண சாப்பாட்டில் குறை தேடும் ஊரு …
உனக்கு வெறுஞ்சோறு போட்டாலும் மகராசன்னு பேரு …
“தர்மம்” என்ற தமிழ்ச் சொல்லை நீ வாழ வைத்து ,
தர்மங்கள் தலை காக்க பிறந்து விட்டாய் …
ஒரு ரூபாய் காணிக்கையில் நம்பிக்கையை வைத்து ,
உயிர் வாழும் கூட்டத்தை விலகி விட்டாய் …

மேலும்

நன்றி :-) 26-Jun-2016 2:30 pm
மிகவும் ரசித்தேன் தோழரே நன்று.. 24-Jun-2016 3:42 pm
பிச்சை பாத்திரத்தின் சிலரை ஓசையில் ஈரமான முகத்தை காண்கிறான் ஏழையும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:15 am
கல்பனா ரவீந்திரகுமார் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2016 2:46 pm

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிர

மேலும்

கல்பனா ரவீந்திரகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2016 11:36 am

பிறந்தவுடன் அழுவதில் ஆணும் பெண்ணும்
சமம்தான் எனினும்
அழுகையோடு அழகையும் கூட்டி வருவது பெண்மையே

என்னவள் அழுகையில் மருதாணி. .

அவள் காவியம் சொல்லும் கண்ணகி அல்ல
ரம்பையும் ஊர்வசியும்
ரதியும் மேனகையும் அல்ல.

அடர்ந்த நகரத்தில் நகரும் அகலிகை அவள்

கற்காலம் முதல் ஓவியமே முதல் பாஷை
அழகுக்குப் புதுக் குரல் தொனிக்க
அவள் கால் தடம் எல்லாம் மொழிபெயர்க்கப்படுகிறது

பேருந்தின் ஜன்னல் வழி
விமானத்தை வெல்லும் வேகத்தோடு
சிறகடிக்கும் சிட்டுகுருவி

அவள் சிலிகான் நுண் செயலி கண்கள்

பிள்ளைத்தமிழ் பத்து பருவமாம்
முறையாய்
ஐந்தாம் பருவம் அள்ளித் தரும் முத்தம்

பருவம் மாறினாலும் பால் மனம் மாற

மேலும்

பெண்மையின் சிறப்பு பற்பல கோணங்களில் பளிச்சிடுகிறது. 22-Jun-2016 10:52 pm
நன்றி தோழமையே 21-Jun-2016 10:25 am
நன்றி தோழமையே 21-Jun-2016 10:25 am
நன்றி தோழமையே 21-Jun-2016 10:25 am
கல்பனா ரவீந்திரகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2015 4:13 pm

இரத்தம் கசியும் இரவு ஒன்று
அதோ அவள்
அவள் என் அருகே. .மிக அருகே
சிமிட்டாத கண்களே கத்திமுனை போல்
கருமையே உருவமாய் உலவுகின்றாள். .

என் அறையெங்கும் அடங்காமல் வீசும்
சவ ஊர்வலத்தின் ஊதுவர்த்தி வாசமும்
சவ்வாது கலந்த ரோஜாவின் நெடியும்
சரியும்படி தலைசுற்றலை தரும் நேரம்

நேரம் சரியாக மூன்று
இன்னும் அவள் அங்கும் இங்கும்
எதையோ ஆவேசமாய் தேடுகிறாள்
தரையில் தேடியது போதாதென்று
தடதடவென சுவற்றில் பரபரப்பாய் தாவுகின்றாள்

ஒருவேளை இருளின் கலவரமோ இது ??
ஓரமாய் தொங்கிய என்
ஒய்யார புகைப்படம் ஒன்று
ஒரே நொடியில் நொறுங்கிட

மொத்த நடுக்கமும் நெஞ்சில் தெறிக்க
கட்டுண்டதாய் தவித்த கைகளை

மேலும்

நன்றி தோழமையே. . . 28-Oct-2015 9:01 am
அசத்த = அசத்தல் ( எனது பிழை ) 27-Oct-2015 6:43 pm
அடடா அசத்த தோழமையே என்னையும் கொஞ்சம் பயமுத்தியது கவிதை கவியின் கட்டமைப்பு மிக சிறப்பு வாழ்த்துகள் தொடருங்கள் 27-Oct-2015 6:42 pm
கல்பனா ரவீந்திரகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2015 1:46 pm

நான்
சிறகடிக்க துடிக்கிறேன். .
தலையில் தட்டுவது
வானமா. . ?
வீட்டின் மேற்கூரயா. . ?

மேலும்

பணிக்காத்தில் உறஞ்சது போல்
பிணமா நீ கேடகுறியே
வளமேறி வலை வீசி
பொத்துபோன விரல் பிடிச்சு
நடந்த காலம் இனி வருமா . . ? ?
எழுந்து வர இயலாம
எப்பவும் நீ படுத்ததில்ல. . .
பகலிரவா பாடுபட்டு
பட்டணத்துல படிக்கவச்ச
புள்ள உன்ன கேக்கயில
என்னய்யா சொல்லிடுவேன் . . ? ?
செல்லமக கதறுவது. . உம்ம
செவிகளுக்கு எட்டலையோ . . ? ?
கடல்தாய கூறுபோட்டு
சுவரெழுப்ப தோதில்ல . . .
கண்ணுக்கேதும் தட்டுபடாத
கோடு ஒன்னு இருக்குதுன்னு
பெரியவக சொல்லுறது
பாவி எனக்கு விளங்கலையே . . .
கட்டுமர மகன் உன்ன
சுட்டு கொண்ண பாவி யாரு . . ? ?
இன்னும் எத்தன உசுரு
வேணுமுன்னு பட்டியல்
போட்டு தர சொல்லு . . .

மேலும்

என்றும் போல் தான் இன்றும்
பேருந்து நிருத்தம் பெரும்
போர் நிலமாய் மாறியிருந்தது..

"ஏம்மா இறங்கவிட்டு ஏறினா என்ன?"
பருமனாய் பெண்ணொருத்தி.
இடித்துத் தள்ளி. .ஒருவழியாய்
ஏறினேன். . .

ஓரு சீட்டு கூட இல்லை
கண்ணாடி பாட்டியின் சலிப்போடு
கண்கண்ட கணவனாய்
இறுக பற்றிக்கொள்ள போகிறேன்
இரும்பு கம்பியில் ஒன்றை. . .

விசில் சத்தம் அலற
வேகமாய் புகை கிளம்ப
கியர் மாற்றி ஓடியது
புதுகொலுசின் குலுங்கலாய் பேருந்து.

சுலீரென விரல் பதிய
அறைந்தது வெயில். .
கதிரையும் ஏமாற்றி
முகத்தை மூடிய பெண்ணொருத்தி. .

யாரும் பாரா வண்ணம் முகம் மறைப்பாளாயின்
முழுதாய் ஆடை அணிய என்ன தடையோ??
காதில்

மேலும்

சொன்ன நடை அழகு சகோ . தொடருங்கள் 15-Aug-2015 11:27 pm
அருமையான சிந்தனை 07-Aug-2015 9:21 am
அருமை 11-Jul-2015 3:44 pm
நல்ல படைப்பு. தொடருங்கள். கீழ்க்கண்ட பிழைகளைக் கவனிக்கவும். இறுகப் பற்றிக்கொள்ள போகிறேன் அலர - அலற அரைந்தது - அறைந்தது ஏமாருவது - ஏமாறுவது நிருத்தத்தை - நிறுத்தத்தை 26-Jun-2015 2:27 pm

சுயநலம் என்றும் ஜனிப்பதில்லை
உருவாக்கப்படுகிறது. . .

உறவுக்காய் ஊருக்காய் உற்றாருக்காய்
உணர்வை வதைத்து ஊனை அறுக்கும்
உயர்ந்த பொது நல விரும்பிகளே. . .
உங்களையும் உதைதெரிய
உத்தம உள்ளங்கள் பல உண்டு உலகில். . .
உதைத்த காலே ஊன்றி நடக்க
ஊமையாய் பொறுக்கும் பூமி இல்லை நான். . .

வாங்கிய வலியெல்லாம்
வலிமையோடு ஏற்று நின்றேன். . .
வலியேர்க உனக்கும் விதயுண்டு என்றே
இன்று வீசி எரிகிறேன் மனசாட்சியை. . .

பழிவாங்கல் பாவமில்லை
பாண்டவரோ கௌரவரோ
பழியேற்றே படைகொண்டார். . .

என் சுயமும் சுகமும் பறித்த பாவத்துக்கே
சுயநலமாய் பிரிந்து நிற்கிறேன்
தாயும் சேயும் ஆனாலும்
வாயும் வயிறும் வே

மேலும்

அருமை அருமை அழகு கவிதை..வாழ்த்துக்கள் ! 17-Nov-2014 7:18 pm
நல்ல கற்பனை கல்பனா... வாழ்த்துக்கள்... 17-Nov-2014 6:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
புவன்

புவன்

chennai
மணி

மணி

திருச்சி
ஜோபி ஜான்

ஜோபி ஜான்

சென்னை
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (46)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (47)

sarabass

sarabass

trichy
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
மேலே