சுயநலம்

சுயநலம் என்றும் ஜனிப்பதில்லை
உருவாக்கப்படுகிறது. . .

உறவுக்காய் ஊருக்காய் உற்றாருக்காய்
உணர்வை வதைத்து ஊனை அறுக்கும்
உயர்ந்த பொது நல விரும்பிகளே. . .
உங்களையும் உதைதெரிய
உத்தம உள்ளங்கள் பல உண்டு உலகில். . .
உதைத்த காலே ஊன்றி நடக்க
ஊமையாய் பொறுக்கும் பூமி இல்லை நான். . .

வாங்கிய வலியெல்லாம்
வலிமையோடு ஏற்று நின்றேன். . .
வலியேர்க உனக்கும் விதயுண்டு என்றே
இன்று வீசி எரிகிறேன் மனசாட்சியை. . .

பழிவாங்கல் பாவமில்லை
பாண்டவரோ கௌரவரோ
பழியேற்றே படைகொண்டார். . .

என் சுயமும் சுகமும் பறித்த பாவத்துக்கே
சுயநலமாய் பிரிந்து நிற்கிறேன்
தாயும் சேயும் ஆனாலும்
வாயும் வயிறும் வேறென்று. . .!!

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (17-Nov-14, 6:13 pm)
Tanglish : suyanalam
பார்வை : 239

மேலே