தேவதைகளில் இவள் வேறு

பிறந்தவுடன் அழுவதில் ஆணும் பெண்ணும்
சமம்தான் எனினும்
அழுகையோடு அழகையும் கூட்டி வருவது பெண்மையே

என்னவள் அழுகையில் மருதாணி. .

அவள் காவியம் சொல்லும் கண்ணகி அல்ல
ரம்பையும் ஊர்வசியும்
ரதியும் மேனகையும் அல்ல.

அடர்ந்த நகரத்தில் நகரும் அகலிகை அவள்

கற்காலம் முதல் ஓவியமே முதல் பாஷை
அழகுக்குப் புதுக் குரல் தொனிக்க
அவள் கால் தடம் எல்லாம் மொழிபெயர்க்கப்படுகிறது

பேருந்தின் ஜன்னல் வழி
விமானத்தை வெல்லும் வேகத்தோடு
சிறகடிக்கும் சிட்டுகுருவி

அவள் சிலிகான் நுண் செயலி கண்கள்

பிள்ளைத்தமிழ் பத்து பருவமாம்
முறையாய்
ஐந்தாம் பருவம் அள்ளித் தரும் முத்தம்

பருவம் மாறினாலும் பால் மனம் மாறாமல்

மரையிடல் செய்யப்படாத
புருவங்கள் மத்தியில்
ஒரு நாள் வாழும் பொட்டின் நினைவாக

சாம்பலை அள்ளி திருநீறாய் இட்டுக்கொள்கிறாள்

வைரம் பதித்த தங்கச் சரடுபோல்
வியர்க்கும் நெற்றியில்
வெயில்படும் வேளையில்

விக்கிவிடுகிறது என் விரல்கள்

அரிசி வச்சி கால் மணி ஆச்சு
குக்கர் விசிலே வரலையே..
சூரியன் விசிலோடு விடிய

அள்ளி முடிந்த கூந்தலும்
அரை கைலி நோட்டத்தில் நைட்டியும்

சமையலறை வாசல்வரை சென்று
காபியை வாங்கியபடி
கருவிழியில் முத்தமிட்ட பொழுதெலாம்

கருவளையமும் என்னவள்
அழகுக்கு திருஷ்டி பொட்டுதான்.

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (20-Jun-16, 11:36 am)
பார்வை : 391

மேலே