அன்பே நீ வந்தபோது-21-உயிர் மதுவே உன்னோடு நான்

அன்பே,
உன் கண்கள்
என்னைக் குடிக்கறது
உன் பெண்மை
என்னை நெரிக்கிறது!

அமுதரோஜவே,
முள்ளிருந்தும்
நீ முள்ளோடு
வரவில்லை
சப்தமில்லாமல்
என்னை சந்திக்க
வந்தாய்

சந்திப்பில்
நீ தந்த
முத்தத்தின்
சத்தத்தில்
சங்கீதம்
சமாதியாகிவிட்டது!

அமுதம் வழிந்தோடும்
அழகிய கண்களில்
ஆசையை வடிகட்டியது
எனக்குத் தானா!


வானத்திற்கு
வழிகேட்க வந்த
குயிலைப்போல்
எனக்கு முனனால்
சிறகடித்து நின்றாய்!
சந்தித்துப் பேசினாய்
மௌனம் கலந்த
மலர்ப் பார்வையில்!

நான் சப்தமின்றி
ஒடுங்கிப் போனேன்
என்னை அடிமைப் படுத்திய
அந்த நாளில்
உன் பரிபூரனங்களில்
என் நினைவுகளுக்கு
பதவி கிடைத்தது!

உன் பொன்னுதடு
தீக்குச்சிபோல் தீட்டியது
முத்தங்கள் சுட்டன
எச்சில் அங்கு
ஈரமாய் இல்லை
இதயமாய் இருந்தது!

என் மனக் கிண்ணத்தில்
குதூகலித்து குதித்து
கொப்பளித்துப் பொங்கி
என் மீது வழிந்தோடி
வந்தாய்!

உதடினிக்க
உள்ளம் களிக்க
உயிர் மதுவே
உன்னோடு நானிருந்தேன்
அப்போது
ஆகாய மார்க்கத்தில்
அதிசயப் பாதையில்
பறந்து நான் போனேன்!

கண்களால் பேசி
காயமாக்கும் உதடுகளை
இந்த காளைக்குத் தந்தாய்!

வானத்து நிலவிடம்
வண்ணமலர்க் கோலம்
பூத்துக் குலுங்கியது போல்
உன் பூவிழியின் ஜாலம்!

கையோடு கைசேர்த்து
கட்டி அணைத்தாலும்
சுட்டு எரிப்பதில்
சுகமான ஒன்று
உன் கடைக்கண் நின்று
காட்டுகின்ற பார்வை!

எழுதியவர் : ஜெயபாலன் (20-Jun-16, 12:31 pm)
பார்வை : 157

மேலே