நீ தொட்டு தூக்குவாய் எனில் நான் தூக்கில் தொங்கவும் தயார்

கை தவறும் பொழுது தான்
மதிப்பு தெரிகிறது
கை தவறும் பொழுது தான்
தேவை புரிகிறது
கை தவறும் பொழுது தான்
பாசம் விளங்குகிறது
கை தவறும்பொழுது தான்
வேஷம் வெளிப்படுகிறது
கை தவறும்பொழுது தான்
உண்மை விளங்குகிறது
கை தவறும்பொழுது தான்
வலி தெரிகிறது
கை தவறும்பொழுது தான்
ஆழம் புரிகிறது

&&&&&&&&&&&&&&&&&

கை தவறும் பொழுதெல்லாம்
நீ தொட்டு தூக்குவாய் எனில்
நான் தவறி கொண்டே இருப்பேனடா

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Jun-16, 12:36 pm)
பார்வை : 104

மேலே