உன்னை கட்டிக்கொள்வேன்
கொடுக்கிற கை மேலேயும்
வாங்கற கை கீழேயும்
இருக்க வேண்டும் என்பார்கள்
காதலில் தான்
இருவரும் கொடுக்கிறார்கள்
இருவரும் வாங்குகிறார்கள் கைகளை(கைகளால்) கட்டிக்கொண்டு
வலது கை
கொடுப்பதை
இடது கை அறியக்கூடாது
இங்கே இவர்களோ
அறிவதில்லை
தன்னையே
~ பிரபாவதி வீரமுத்து