( இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் இரயில்...
( இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் காலையில் நடந்த இந்த இளம் பெண்ணின் கொடூரக் கொலையை பத்திரிகைகள் , ஊடகங்கள் வாயிலாகக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தேன்.
கடந்த 48 மணி நேரமாக சரியாக சாப்பிடவோ தூங்கிடவோ முடியவில்லை. உண்மைக் காரணமும் , நோக்கமும் , கொலையாளி எவரென்றும் இதுவரை ஒரு துப்பும் கிடைக்காத அளவில் ஏகப்பட்ட சந்தேகங்கள் , பேச்சுக்கள், குற்றங்கள் குறைகள் கூறுதல் என்று பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த அரசியல்கட்சிகளோ அரசாங்கமோ இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொண்டு போராட தயாராகவில்லை என்பதுதான் மிக்க வருத்தம் .
படங்களை பார்க்கும் நமக்கே குலை நடுங்குது ....இதயம் வெடிக்கது ....துக்கம் அழுகையாக வெடிக்கிறது . ஆனால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை நினைத்தால் சோகம் பன்மடங்கு கூடுகிறது . நம் குருதி கொதிக்கிறது . எங்கே உள்ளது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு ....மக்களுக்கு அடிப்படைத் தேவையான பாதுகாப்பு .....யாரும் சிந்திக்கவே இல்லை அதை பற்றி. அனைத்திற்கும் சாதி மதம் அரசியல் என்று வண்ணம் பூசி எண்ணத்தை கூறி மேலும் குழூப்புவதும் குறை கூறுவதும் தான் நடக்கிறது ...பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் .
சுற்றி இருந்தவர்களில் ஒருவருக்கும் தைரியம் வரவில்லையா .....வாய்ப்பேச்சால்லாம் ஒன்றும் எடுபடலை ...வீரத்தை காட்டவில்லை . துணிவில்லை ஒருவருக்கும் . இதில் கூடவா ஒன்றாக இணைந்து செயல்பட தோன்றவில்லை ???? அதைவிட கொடுமை அந்த உடல் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அப்படியே அந்த நிலையிலே இருந்ததை நினைத்தால் வயிறு எரிகிறது. அந்த மாதிரி சட்டம் நமக்கு தேவையில்லை. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றுகூடி கலந்திந்து ஒரு தீர்க்க சட்ட திருத்த முடிவினை எடுத்து வர வேண்டும் .
அடிப்படை காரணம் , ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாப்பிற்க்காக எந்த ஒரு நடந்தவடைக்கையும் இதுவரை எடுக்கவும் இல்லை முயற்சிக்கவும் இல்லை . ஆயிரமாயிரம் எண்ணங்களுடன் எதிர்ப்பார்ப்புகளுடன் மிகப்பெரிய கனவுகளுடன் மனதில் கொண்டு வாழ்ந்த இந்த இளம்பெண் " ஸ்வாதி " நெஞ்சத்தில் இருந்தவை தெரியாது. அத்தனையும் ஒரு நொடியில் கருகி விட்டது . இதுபோல தொடர்ந்து தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகளும் , பழிவாங்கும் படலங்களும் , வஞ்சம் தேரர்க்கும் நஞ்சு எண்ணம் கொண்ட கொடுமையான செயல்களும் மேலும் மேலும் விரிந்து கொண்டே போகிறது. அப்படி எனில் மக்களின் நிலை என்ன ...பாகுகாப்புக்கு வழி என்ன
காவல்துறை மிகவும் வேகமாக செயல்பட்டு கொலையாளியை கண்டுபிடித்து உச்ச தண்டனையாக தூக்கு தணடனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நிறைவேறுமா ...??????
தமிழ்நாடு அரசும் இரயில்வே நிர்வாக காவல்துறையும் இணைந்து மிக வேகமாக செயல்பட்டால் குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்கும் என்பது அனைவரின் எண்ணம் . அவா .
என்னதான் இருந்தாலும் மீண்டும்தான் பார்ப்போமா அந்த இளம் அறிவு ஜீவியை ....அந்த இரக்கமிகு இதயத்தை ....மதிப்பில்லாத ஓர் உயிரை ....அந்த குடுபத்தின் குலவிளக்கை .....
கண்ணீர்த் துளிகளுடன் எந்தன் அஞ்சலி
பழனி குமார் Palani Kumar N R

....மேலும் பல "ஸ்வாதி" களின் நிலை நடவாமல் அதோடு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு அனைவரும் இணைந்து கலந்து ஆலோசித்து வாழ வழி வகைகள் செய்திட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் ஒரே வேண்டுகோள் ஆகும் . சிந்திக்க வேண்டியவர்கள் செய்வார்களா ...செயலாற்றுவார்களா ...என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. பூத்துக் குலுங்க வேண்டிய ஒரு மலர் , மொட்டிலேயே அழிக்கப்பட்டுவிட்டது . கண்ணீர் பெருகுகிறது . நம்மால் அவர்கள் தாய் தந்தையருக்கு ஆறுதலும் கூற முடியாமல் வெட்கி தலை குனிய வேண்டிய நிலையில் உள்ளோம்.