என் தாய் எனக்காக! தினமும் காத்திருப்பது என் தாய்......
என் தாய்
எனக்காக!
தினமும் காத்திருப்பது என் தாய்...
நான் பிறருக்காக காத்திருப்பது
தாயின் அன்பை புரியாமல்!
அம்மா...
மகனிடம் பொய்யாக பேச
தெரியாதவள்!
மகனின் அன்பை தவிர
வேறவொன்றும் விரும்புவதில்லை...
மகனிடம் கோபத்தை காட்டத்தெரியாத
தாய்...
மகனின் விருப்பத்தை மட்டும்
புரிந்துக்கொள்ளக்கூடிய தாய்...
இவ்வுலகில் தாயின் அன்புக்கு
இணையாக யாரும் இருக்க
முடியாது!
தாயை நேசிப்பவன் நல்ல மகன்
என் தாயிடம் அன்பை வெளிப்படுத்த
தெரியாத ஒரு பைத்தியக்காரன் - நான்!
மு.ராஜேஷ் பெரியசாமி