கடலோர கண்ணீர்த்துளி
பணிக்காத்தில் உறஞ்சது போல்
பிணமா நீ கேடகுறியே
வளமேறி வலை வீசி
பொத்துபோன விரல் பிடிச்சு
நடந்த காலம் இனி வருமா . . ? ?
எழுந்து வர இயலாம
எப்பவும் நீ படுத்ததில்ல. . .
பகலிரவா பாடுபட்டு
பட்டணத்துல படிக்கவச்ச
புள்ள உன்ன கேக்கயில
என்னய்யா சொல்லிடுவேன் . . ? ?
செல்லமக கதறுவது. . உம்ம
செவிகளுக்கு எட்டலையோ . . ? ?
கடல்தாய கூறுபோட்டு
சுவரெழுப்ப தோதில்ல . . .
கண்ணுக்கேதும் தட்டுபடாத
கோடு ஒன்னு இருக்குதுன்னு
பெரியவக சொல்லுறது
பாவி எனக்கு விளங்கலையே . . .
கட்டுமர மகன் உன்ன
சுட்டு கொண்ண பாவி யாரு . . ? ?
இன்னும் எத்தன உசுரு
வேணுமுன்னு பட்டியல்
போட்டு தர சொல்லு . . .
கடல் மடியில
கெடக்குற நமக்கு
காதுக்கெந்த குறையுமில்ல . . ! !
சுதந்திர காத்த சுவாசிக்க
உரிமை இங்க எப்போ வரும்........???