சுஜித் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுஜித் |
இடம் | : அறந்தாங்கி |
பிறந்த தேதி | : 17-May-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 801 |
புள்ளி | : 26 |
அனுபவத்தை எழுத்துகளாக மாற்ற நினைக்கும் சாமானியன்
துவைப்பதற்கு கூலி இரண்டாயிரமாம்
சமைக்க கேட்டால் மூவாயிரமாம்
பாத்திரம் துளக்க ஆயிரத்தி ஐநூறாம்
குழந்தைகைளை கவனிக்க ஐந்தாயிரமாம்
ஒற்றை இரவுக்கே ஓராயிரமாம்
முதியோரை பார்த்துக்கொள்ள இரண்டாயிரமாம்
இவை அனைத்தும் செய்ய ஆள் பிடித்துவிட்டானாம்
நூறு பௌன் போட்டாதான் கௌரவமாம்
இந்த ஜனநாயகம் பிச்சை எடுக்கிறது நிஜ நாயகிகளிடம்
-சுஜீத்
சிசுவிலேயே கொன்றார்கள்
தவித்தோம்
குழந்தை திருமணம் என்றார்கள்
துடித்தோம்
தாசியாக்கினார்கள்
கதறினோம்
உடன்கட்டையேற சொன்னார்கள்
மன்றாடினோம்
பேருந்திலே உரசினார்கள்
சினுங்கினோம்
ஜீன்ஸ் போடாதே என்றார்கள்
ஒப்புக்கொண்டோம்
பெண்களே தெய்வம் என்பார்கள்
ஆசிடில் அபிஷேகம் செய்வார்கள்
கற்புக்கரசியையும்
தீயில் குளிக்க சொல்வார்கள்
பெண்கள் நம் கண்கள் என்பார்கள்
கற்பளித்துக் கொல்வார்கள்
இரும்பு ராடை விட்டு
இருமாப்பைக் காட்டுவார்கள்
காந்தியே நீ தோற்றுவிட்டாய்
இரவில் பெண்வேடமிட்டவர்கூட
நடமாட முடிவதில்லை
ஆண்களே உயிர்குறியை
சரியாக பயண்படுத்துங்கள்
இனி அறுத்தெறியப்படும்
-சுஜீத்
உந்தன் கேள்விகளுக்கு
என்னிடம் பதிலில்லை பெண்ணே
என்னை மன்னித்துவிடு
நம்மைச் சுற்றிலும்
பலர் இருந்தும்
தனிமையாய் நாம் இருவரும்
இதென்ன கொடுமை
நம் காதலுக்கு
ஏன் காலக்குறுக்கீடு?
யார் அது?
அந்த ஒருவர் மட்டும்
நம்மை கண்கானித்து
கொண்டே இருக்கிறாரே!
நல்லதாய் போயிற்று
சாட்சி கையெழுத்தை
அவரே போடட்டும்
அப்பாடா நேரம் வந்துடுச்சு
மூன்று முடிச்சு போட்டுட்டேன்
ஐயோ வேண்டாம்
அவளை என்னைவிட்டு பிரிக்காதீர்கள்
உன் வீட்டாரை
நான் எச்சரிக்கிறேன்
தவறை திருத்திக் கொள்ளுங்கள்
சீக்கிரமாய் என் கரங்களில்
அவளை ஒப்படைத்துவிடுங்கள்,
தேர்வுத் தாள்.
-சுஜீத்
பள்ளிக் கூட்டம்
உஜாலாவின் மகிமையிலே
நீலமான வெள்ளைச் சட்டை
கட்டைவிரலுக்கு காற்றோட்ட வசதிகொண்ட
கருப்பு கலர் ஷூ
தேனீக் கூட்டங்களை எரும்புக் கூட்டங்களாக்கும்
பி.டி வாத்தியாரின் விசில் சத்தம்
முட்டியிலேயே அடிக்கும் சொட்டைத்தலை வாத்தியார்
சுட்டிகளுக்குப் பிடிக்கும் சோடாபட்டி மிஸ்
மேகி பூரி டிபன் பாக்ஸை
சுற்றி வட்டமேசை மாநாடு
உப்புமா சேமியா இருக்கும் பாக்ஸ்
பக்கம் கையும் போகாது
ஓட்டப்பந்தையத்தில் பேன்ட் கிழிந்ததால்
பக்கவாட்டில் ஓட்டம்பிடித்தது
பாட்டில் நிரப்புதலில் தோற்றுப்போனதால்
கண்களை கண்ணீரில் நிரப்பியது
அடுமனையில் பப்ஸ் வாங்கி
சாஸினால் அலங்கரித்து
பாரதியார் வேஷம்போட்ட எனக்
இது நான் தானோ?
புன்னகை புசித்தே
பழகிய உதடுகள்
கதறியழும் நிலையில்
கதியத்து இருக்கிறது
பாவங்கள் காட்டியே
பழகிய கண்கள்
பாவமாய் இப்போது
கண்ணீர் வடிக்கிறது
உற்சாக உடல்மொழிகள் காட்டும் என்மேல்
சோக கிருமிகள்
தொற்றிக் கொண்டது
தாராளம் காட்டிய எந்தன் வாயோ
தராசு போல அளந்து பேசுகிறது
என் சிரிப்பு சரவெடிகள்
கண்ணீரில் நனைந்து நமத்துவிட்டது
கவிதை வரிகளை தந்த காத்திருப்புகள்
முதல்முறையாய்
கடுப்பை தருகிறது
தென்றலை வீசிய
பேருந்து ஜன்னல்
இப்போது துர்நாற்றம் வீசுகிறது
இசையாய் ஒலித்த ஹாரன் சத்தம்
காது ஜவ்வை கிழிக்கிறது
ஒருவழி பாதையில்-
எதிர்புறம் பார்த்து
சாலையை கடக்கிறேன்
தவமிருந
உன் பார்வை
என் கவிதைக்கு துவக்கப்புள்ளி
உன் மொழிகள்
என் வலிகளுக்கு முற்றுப்புள்ளி .
உன் செய்கை
நான் ரசிக்கும் ஆச்சிரியக்குறி !
உன் காதல்
மட்டும்
என் வாழ்வில் வினாக்குறி ?
புல்லில் விழுந்த பனி நீ
பார்த்தாலே சுவை தரும் கனி நீ
இதயத்திற்கு கடவுச்சொல் இட்ட கணினி
நிலத்தில் வந்த தேவதை பெண் நீ
நீதான் எந்தன் கனவு கன்னி
உன்னை கவர்வதே என் முழுநேர பணி
வாயினுள் அண்டத்தை காட்டியவன் கோபிய கடவுள்
ஒற்றை பார்வையில் அகிலத்தையே உணர்த்திடும் நீ
எந்தன் காதல் கடவுள்
உன் கண்கள் அது களரை விளக்கம்
உன் பாலவ இன்பத்துப் பாலையும் விளக்கும்
என் உலகமான உன்னை நான்
ஒவ்வொரு நொடியும் சுற்றி வருவேன்
உனக்கும் எனக்கும் இடையில்
பலஜென்ம கதைகளை இயற்றி இருக்கிறேன்
உன்னிடமிருந்து வரும் குருந்தகவுளுக்காக
எந்த போதி மரத்திலும் தவம் இருப்பேன்
உன் வாய்வழி வரும் வாய்ஸ் நோட்க
இரவலாய் கேட்கின்றான்
ஏற்கனே திருடு போய்விட்ட
என் இதயத்தை .
அவருக்குத் தெரிந்து பேசினாரோ என்னவோ அவசரத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டார். மனப்பிராந்தியங்களின் அழுத்த நடவுகளில் வீசிச் சென்ற நாற்றுகளின் ஒழுங்கீனம் போல் அப்பப்ப அவருக்கும் அப்படித்தான் நடக்கிறது அதற்கப்புறம் தனிமையில் இருக்கும் போது அவருக்குள்ளாகவே அவருக்குள் குறை பட்டுக் கொள்வார் . ''அவசரப் பட்டுவி ட்டோமோ அப்படி பேசி இருக்கக் கூடாதோ "
பக்கத்தில பள்ளிக்கூட மணி அடித்தது ..மணி நான்கு ஆகிவிட்டது கல்லூரிக்குப் போன மகன் இப்ப வந்துடுவான் அப்புறம் கொஞ்சம் நேரம் கழித்து பள்ளியிலிருந்து மகள் வந்திடுவாள் ....பசங்க வந்ததும் அம்மா எங்கே என்று கேட்பாங்க .
''திட்டிப் போட்டேன் ..நல்லா ஏ