என் காதலி
புல்லில் விழுந்த பனி நீ
பார்த்தாலே சுவை தரும் கனி நீ
இதயத்திற்கு கடவுச்சொல் இட்ட கணினி
நிலத்தில் வந்த தேவதை பெண் நீ
நீதான் எந்தன் கனவு கன்னி
உன்னை கவர்வதே என் முழுநேர பணி
வாயினுள் அண்டத்தை காட்டியவன் கோபிய கடவுள்
ஒற்றை பார்வையில் அகிலத்தையே உணர்த்திடும் நீ
எந்தன் காதல் கடவுள்
உன் கண்கள் அது களரை விளக்கம்
உன் பாலவ இன்பத்துப் பாலையும் விளக்கும்
என் உலகமான உன்னை நான்
ஒவ்வொரு நொடியும் சுற்றி வருவேன்
உனக்கும் எனக்கும் இடையில்
பலஜென்ம கதைகளை இயற்றி இருக்கிறேன்
உன்னிடமிருந்து வரும் குருந்தகவுளுக்காக
எந்த போதி மரத்திலும் தவம் இருப்பேன்
உன் வாய்வழி வரும் வாய்ஸ் நோட்களில்
வானம்பாடி பறவைகளின் ராகம் உணர்கிறேன்
உன் இமையில் அனுப்பும்
ஈமெயில் எனக்கு மட்டுமே புரியும் -ஏனெனில்
என் ஆண்மை புயல்
உன் இமையில் மையம் கொண்டுள்ளது .
காதல் டயாபடீஸ் நோயாளி நான்
அன்பெனும் இன்சுலினை குத்தி என்னை தேற்று
-சுஜீத்

