என்னவள்
உந்தன் கேள்விகளுக்கு
என்னிடம் பதிலில்லை பெண்ணே
என்னை மன்னித்துவிடு
நம்மைச் சுற்றிலும்
பலர் இருந்தும்
தனிமையாய் நாம் இருவரும்
இதென்ன கொடுமை
நம் காதலுக்கு
ஏன் காலக்குறுக்கீடு?
யார் அது?
அந்த ஒருவர் மட்டும்
நம்மை கண்கானித்து
கொண்டே இருக்கிறாரே!
நல்லதாய் போயிற்று
சாட்சி கையெழுத்தை
அவரே போடட்டும்
அப்பாடா நேரம் வந்துடுச்சு
மூன்று முடிச்சு போட்டுட்டேன்
ஐயோ வேண்டாம்
அவளை என்னைவிட்டு பிரிக்காதீர்கள்
உன் வீட்டாரை
நான் எச்சரிக்கிறேன்
தவறை திருத்திக் கொள்ளுங்கள்
சீக்கிரமாய் என் கரங்களில்
அவளை ஒப்படைத்துவிடுங்கள்,
தேர்வுத் தாள்.
-சுஜீத்