விடுபட்ட ஹைக்கூ

ஒரு நாள் ஓய்வா..!
அப்படின்னா..?
அலறும் சூரியன் ! (கலைஞர்) 1

நாளை நாமளா..?
உதறலோடு உலா…
இலை கட்சி நிர்வாகிகள்.! 2

தெருமுனை கூட்டம்
தொலைந்தது
தெருவாசிகளின் தூக்கம் 3

மது ஒழிப்பு மாநாடு
துவக்கி வைக்க வருகிறார்
மதுபான துறை மந்திரி ! 4

படிப்பென்றப் பெயரில் பகல் கொள்ளை
பட்டத்து ராசாக்கள் பெயரில் பாடசாலை
டிகிரி வாங்குமுன் எகிறுது – கல்வி கடன்! 5

அவரவர் தலைவர்களின்
பிறந்தநாள் கொண்டாட்டம்
குலை தள்ளா வாழைகள் - கொலை ! 6

வீர விளையாட்டு மிருகவதை..!
வலுக்கட்டாயா பச்சைக்குத்து…..?
J விசுவாசிகளின் மனிதவதை..! 7

அம்மாவுக்காக அம்மனுக்கு
ஆயிரத்தெட்டு குட பாலாபிஷேகம்!
ஆலயவாசலில் பாலுக்கழும் பச்சிளம் குழந்தை! 8

கட்சி தலைமைமீதுள்ள விசுவாசமாம்
சின்னப்புள்ளத்தனமான தீர்ப்புக்கு
ஆயுள் தண்டனையே அதிகம்தான் - பஸ் எரிப்பு! 9


இனாமாய் வந்த இலஞ்ச பணத்துக்கு
பினாமியாய் இருந்தவன் பிணமானான்
காரணகர்த்தாவின் கரங்களில் – ரோஜாமாலை..! 10

எழுதியவர் : சாய்மாறன் (8-Apr-16, 2:40 pm)
பார்வை : 149

மேலே