தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 24 = 66
“ஊரோரம் ஓடை ஓடுது வளை வளைவாக
காதோரம் கானம் கேட்குது தேன் சுவையாக”
“கார்மேகம் மழை தூவூது மணி மணியாக
இருப்பேரும் உறவு கலப்போம் துளிதுளியாக”
பொய்யன்பு இல்லை;
உண்மையின் பிள்ளை நான்தானே.. !
உன்னில் நூறு மூலக்கூறு கண்டேனே !
கன்னி முல்லை; பூக்கவில்லை
வெறும் மொட்டு நானே.. !
உன்னைக்கண்டு இன்பம் கொண்டு - பூத்தேனே !
மலரும் மலரில் மது இருக்குமென்று
கருவண்டு வருது மோகம் கொண்டு
கவிகள் இதயம் உதயம் முன்பே
கற்பனை உலகில் பறக்கும் அன்பே
இருபேரும் உறவாடும் இரவு நேரம்
உயிர்தாது உருவாகி உள்ளே பாயும்
பாய பாய மெதுவாக அறை நிரம்பும்
முன்னூறு நாளில் அதுவாக ததும்பும்