பள்ளிக்கூட்டம்
பள்ளிக் கூட்டம்
உஜாலாவின் மகிமையிலே
நீலமான வெள்ளைச் சட்டை
கட்டைவிரலுக்கு காற்றோட்ட வசதிகொண்ட
கருப்பு கலர் ஷூ
தேனீக் கூட்டங்களை எரும்புக் கூட்டங்களாக்கும்
பி.டி வாத்தியாரின் விசில் சத்தம்
முட்டியிலேயே அடிக்கும் சொட்டைத்தலை வாத்தியார்
சுட்டிகளுக்குப் பிடிக்கும் சோடாபட்டி மிஸ்
மேகி பூரி டிபன் பாக்ஸை
சுற்றி வட்டமேசை மாநாடு
உப்புமா சேமியா இருக்கும் பாக்ஸ்
பக்கம் கையும் போகாது
ஓட்டப்பந்தையத்தில் பேன்ட் கிழிந்ததால்
பக்கவாட்டில் ஓட்டம்பிடித்தது
பாட்டில் நிரப்புதலில் தோற்றுப்போனதால்
கண்களை கண்ணீரில் நிரப்பியது
அடுமனையில் பப்ஸ் வாங்கி
சாஸினால் அலங்கரித்து
பாரதியார் வேஷம்போட்ட எனக்கு
குடுகுடுப்பக்காரனாய் முதல் பரிசு
போர்டை தலைகீழாக பிடித்துக்கொண்டு
ஆடிய வெல்கம் டான்ஸ்
இப்படி எத்தனையோ நினைவுகள் நெஞ்சுக்குள்ளே.
யாரும் கண்டுகொள்ளாத வாட்ஸாப் குரூப்
பீலிங் நாஸடால்ஜியா ஸ்டேடஸ்
இதற்குள் அடங்கிவிட்டதா நம் பள்ளி வாழ்க்கை.
-சுஜீத்.