காதலர் தினம் 4
காதலர் தினம் (4)
========================================ருத்ரா இ.பரமசிவன்
காதல் என்று
மூன்று தடவை உச்சரித்த உடனேயே
சாதல் சாதல் ..என்று
கொட்டு முழக்கப்போய்விட்டானே
அந்த பெருங்கவிஞன்.
நான் எம்மாத்திரம்?
காதல் என்று "ல்"லை
ஒலிப்பதற்கு முன்னமயே
மில்லியன் தடவைகள்
சாதல்...என்று
உச்சரிக்க வைத்து விட்டாயே.
சரி தான் என்று
ஒரு கோப்பையில் குடியிருப்பு
என்ற அந்தக்கவிஞன்
"நொதித்தான்" என்று
நானும் வீழ்ந்தேன்..
ஆனால் இது கோப்பையல்ல
மீண்டு வர முடியாத
அந்த மரணதேவதையின்
கருப்பை....
கருப்பை...
"டேய் எழுந்திருடா..
யாரோ கருப்பைய்யாவாம்
உன் ஃப்ரண்டு
வராண்டாவில் வெகுநேரமாய்
காத்திருக்கிறான்."
அம்மா தட்டி எழுப்பினாள்.
"நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்."
=================================================