புலவர் சநஇளங்குமரன் நபாலசுப்ரமனி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புலவர் சநஇளங்குமரன் நபாலசுப்ரமனி |
இடம் | : நாகலாபுரம் தேனி மாவட்டம் |
பிறந்த தேதி | : 03-Feb-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 6 |
23 ஆண்டுகளாக திருக்குறள்தொண்டாற்றி வருகிறேன். திருக்குறளை முதன்மைப்படுத்தி திருமணங்கள் நடத்தி வருகிறேன். கவிதை, கட்டுரை, எழுதிவருவதோடு இலக்கிய சொற்பொலிவுகள், கவியரங்க நிகழ்வுகளில் கலந்து கொள்வது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்துவது, போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றுவது போன்ற பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறேன். ”தமிழ் என் போர்வாள்” என்ற கவிதை நூலும், ”இன்பத்துள் இன்பம் காமம்” என்ற காதலர் உளவியல் குறித்த திருக்குறள் ஆய்வு நூலும், எழுதியுள்ளேன்.கூட்டுக் கவிதைத் தொகுப்பு நூல்கள் (வையை மலர்கள், விடியலின் விதைகள், நெஞ்சின் அலைகள் ) மூன்று நூல்களைத் தொகுத்துள்ளேன்.இதுவரை 20 க்கு மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன்.
கருமை சூழ்ந்த மேகம்,
ஆந்தையும் அலறும் அந்தி சாய்ந்த நேரம்,
அனைவரும் உறங்கும் அருமையான நேரம்,
என் தூக்கம் களைத்தவள்,
அமைதியாக உறங்குகிறாள்....
- கல்லறையில்!!!!!
கண்ணாடி முன் நின்று
என்னைப் பார்த்தால்
கண்ணாடி அணிந்த நீ
தெரிகின்றாய் அன்பே....
என் கைபேசிக் கூட
ஒவ்வொரு முறையும்
உன் பெயராலே என்னை
அலைக்கழிக்கிறது...
யாரையும் நம்பாதே எரும
என்பாயே...
உன்னையும் சேர்த்துத்தான்
என்று... அன்று
நான் அறிந்திருக்க வில்லை
உன்னை காதலித்தப் பின்
நான் கற்றுக்கொண்டது
பூக்கள் கூட பொய் சொல்லும்
என்று
நடைவண்டி தள்ளி
நடந்து பழகிய
சின்னக் குழஎதைகள்
பறந்து திரிய
முதலில்
முளைத்த
சிறகு......
கருவறையில் உருப்பெற்று
குழந்தையெனப் பெயர்பெற்று
மண்ணைத் தொட்டு,
தாத்தித் தத்தி தவழ்ந்து
தள்ளாடி எழுந்து
நடைவண்டி தள்ளி
நடந்து பழகி
பையைத் தூக்கி
பள்ளிக்குச் சென்றது
குழந்தையின் பயணம்.
பருவ வயதில்
காதல் பயணம்.
கைப்பிடித்தால்
வாழ்க்கைப் பயணம்.
கைவிட்டால்......
மனைவி மக்கள்
பெற்றோர் சுற்றம்
உற்றார் உறவுகள் என
தொடரும் வாழ்வின்
பட்டறிவுப்(அனுபவம்) பயணம்.
ஆக மொத்தம்
மனிதனின் பயணம்
கருவறையில் தொடங்கும்.
கல்லறையில் அடங்கும்!
என்றும் போல் தான் இன்றும்
பேருந்து நிருத்தம் பெரும்
போர் நிலமாய் மாறியிருந்தது..
"ஏம்மா இறங்கவிட்டு ஏறினா என்ன?"
பருமனாய் பெண்ணொருத்தி.
இடித்துத் தள்ளி. .ஒருவழியாய்
ஏறினேன். . .
ஓரு சீட்டு கூட இல்லை
கண்ணாடி பாட்டியின் சலிப்போடு
கண்கண்ட கணவனாய்
இறுக பற்றிக்கொள்ள போகிறேன்
இரும்பு கம்பியில் ஒன்றை. . .
விசில் சத்தம் அலற
வேகமாய் புகை கிளம்ப
கியர் மாற்றி ஓடியது
புதுகொலுசின் குலுங்கலாய் பேருந்து.
சுலீரென விரல் பதிய
அறைந்தது வெயில். .
கதிரையும் ஏமாற்றி
முகத்தை மூடிய பெண்ணொருத்தி. .
யாரும் பாரா வண்ணம் முகம் மறைப்பாளாயின்
முழுதாய் ஆடை அணிய என்ன தடையோ??
காதில்
மரணத்தைக் கண்டு
அச்சப்பட்டால் அது
மடமை!
மரணத்தைக் காண
முயற்சி செய்தால் அது
அறியாமை!
மரணம் அது
எப்போது வரும்?
எவருக்கும் தெரியாது.
மரணம் அது
பிறப்பின் போதே
உறுதிசெய்யப்பட்ட ஒன்று!
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்ட வழ்வை
சரித்திரக்கு!
உன்னை
அண்ணாந்து பார்க்கும்
உலகம்!
.