பயணம் கவியரங்கத் தலமைக் கவிதை
கருவறையில் உருப்பெற்று
குழந்தையெனப் பெயர்பெற்று
மண்ணைத் தொட்டு,
தாத்தித் தத்தி தவழ்ந்து
தள்ளாடி எழுந்து
நடைவண்டி தள்ளி
நடந்து பழகி
பையைத் தூக்கி
பள்ளிக்குச் சென்றது
குழந்தையின் பயணம்.
பருவ வயதில்
காதல் பயணம்.
கைப்பிடித்தால்
வாழ்க்கைப் பயணம்.
கைவிட்டால்......
மனைவி மக்கள்
பெற்றோர் சுற்றம்
உற்றார் உறவுகள் என
தொடரும் வாழ்வின்
பட்டறிவுப்(அனுபவம்) பயணம்.
ஆக மொத்தம்
மனிதனின் பயணம்
கருவறையில் தொடங்கும்.
கல்லறையில் அடங்கும்!