வாசகி

மூளைக்குள் முள்முளைத்து
எனை
முரண் பட வைத்தவளே !!!
உன் காதலில்
வீழ்ந்து போன நான்
எழுதுகோல் பிடித்து
எழ முயல்கிறேன் .......
வா !!!!!
வந்தெனக்கு
வழிகாட்டு,
உயிரின் சுவாசம்
காதலென்று கற்றுக் கொடு....
இல்லையேல் ,
இக்கவிதைகள் கருவிலே
கலைக்கப்பட்டு விடும் ....
இமைகள் கூட விரும்பாதவன்
நான் ....
உன் பிரிவை
எப்படித்தாங்குமோ???
என் மனம் .
இமயம் தூக்கி எறியும்
பலமுள்ளவன்.....
காதல் புயலில் சிக்கி
இன்று
காகித பூவாகிவிட்டேன்...
உன்
மனமென்னும்
மேகத்தை
கலைந்து விடு...
மோகத்தால் என்னூள்
கலந்து விடு....
உனக்காக
வான்பார்த்த என் வாலிபம்
பூமிப்பார்த்து
அதில்
புதையப்பார்க்குதடி...!!!!!