காதல் தோல்வி

கண்ணாடி முன் நின்று
என்னைப் பார்த்தால்
கண்ணாடி அணிந்த நீ
தெரிகின்றாய் அன்பே....

என் கைபேசிக் கூட
ஒவ்வொரு முறையும்
உன் பெயராலே என்னை
அலைக்கழிக்கிறது...

யாரையும் நம்பாதே எரும
என்பாயே...
உன்னையும் சேர்த்துத்தான்
என்று... அன்று
நான் அறிந்திருக்க வில்லை


உன்னை காதலித்தப் பின்
நான் கற்றுக்கொண்டது
பூக்கள் கூட பொய் சொல்லும்
என்று

எழுதியவர் : நவின் (2-Oct-15, 9:17 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 1687

மேலே