மரணத்தை வெல்வாய்

மரணத்தைக் கண்டு
அச்சப்பட்டால் அது
மடமை!

மரணத்தைக் காண
முயற்சி செய்தால் அது
அறியாமை!

மரணம் அது
எப்போது வரும்?
எவருக்கும் தெரியாது.

மரணம் அது
பிறப்பின் போதே
உறுதிசெய்யப்பட்ட ஒன்று!

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்ட வழ்வை
சரித்திரக்கு!

உன்னை
அண்ணாந்து பார்க்கும்
உலகம்!

.

எழுதியவர் : புலவர் ச.ந.இளங்குமரன் (3-Aug-15, 8:54 am)
பார்வை : 60

மேலே