ஏனெனில்
காற்றுபோர்வை கிழிய நான்
காரணமாக அல்லேன்
பனிக்கண்டம் உயிர்துறப்பில்
என் பங்கு ஏதுமில்லை
கடலின் உடல் பெருக்க
காரணம் நான் அல்லேன்
ஓட்டுனர் உரிமத்தால்
எனக்கு உபயோகமில்லை
காப்பிட்டு காகிதத்தை
நான் கைக்கொள்வதில்லை
பதிவுப்புத்தகத்தை நான்
பயன்படுத்துவதில்லை
நடைபயிற்சி என்று நான்
நடப்பதுமில்லை
உடல் குறையவேண்டுமென்று
நான் ஓடியதுமில்லை
எரிபொருள் விலையேற்றம்
என் வயிறேரிப்பதில்லை
அரபு நாடுகளை நான்
அண்டியிருப்பதுமில்லை
ஏனெனில்
நான் ஒரு மிதிவண்டிக்காரன் ......!