அழிந்து வரும் இயற்கை செல்வம்

கண்ணில் தெரிந்த குன்றுகள்
கடற்கரை மணல் வீட்டை நினைவுபடுத்தியது..!

குன்றை சுற்றி இருந்த வீடுகள்
கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வரும்
அலைகளைப் போலத் தென்பட்டது....!

அடுத்து இந்தப் பக்கம் நான் வரும்போது இந்த
அழகான குன்று மண்ணாக மண்ணாகி இருக்கலாம்

அசகாய லேண்டு பிரமோட்டர்கள்
அதையும் கொன்று பிளாட் போட்டு வைத்திருப்பர்

என்று வந்த அச்சத்தில்
எடுத்துக் கொண்டேன் எனக்காக ஒரு போட்டோ..

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Sep-13, 12:56 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 2957

சிறந்த கவிதைகள்

மேலே