வாழ்க்கையின் படிகள்

படிகள் ஆயிரம் இருக்கும் ..வீட்டில் நுழைந்ததும் வாசற்படிகள் ...மாடிக்கு செல்ல மாடிப் படிகள்...இவ்வாறு பயணிக்கும் ஒவ்வொரு இடங்களிலும் படிகள்தான்....
இது இளைஞர்களுக்கானது;;
வாலிபப் பருவம் பயணங்களின் பருவம்
ஒவ்வொரு பயணத்திலும் கற்றுக் கொள்ளும் பாடங்கள் நிறைய உண்டு..மிகவும் தொலைவானது உனது பாதை....!
நாம் செய்யும் பயணங்களில் வெற்றியும் உண்டு
தோல்வியும் உண்டு...தோல்விகளிலிருந்து உன்னைக் கற்றுத் தெளி...காய்ந்த புற்களும் பனிக்கு ஏங்கி துளிர்க்கும்...!
சில சமயங்களில் லிப்ட் களில் பயணிக்கலாம் ..அது நிரந்தரமல்ல..பிறர் தூக்கி மேல் எழுகின்றவன் விரைவிலே கீழே இறங்கி விடுவான் .
நீயே அடி எடுத்து வை. ஒவ்வொரு அடியாய் எடுத்து வை.அடி எடுத்து வைக்கும் முன் உன் குறிக்கோள் எது என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துக் கொள்.
ஓட்டமாய் உன் பயணம் இருக்கட்டும் .எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை.. நதிக்கு இளைப்பாறுதல் இல்லை. உன் பயணம் இலக்கை நோக்கியே பயணிக்கட்டும்.முன்னேறும் பயணம் அதுவே உன் முன்னேற்றத்தின் வெற்றியின் முதற் படி ..உலகம் வெற்றிப் படிகளில் நிற்பவர்களைதான் நினைவில் வைத்திருக்கும்.ஆற்றலோடு செயல்படுங்கள் வரலாறு உங்கள் பெயர் சொல்லும் ...!