குற்றவாளிகள் "கொற்றவர்" ஆகலாமா ? அதற்கு ஒரு சட்டமா ?

நமது நாட்டின் பண்பாடும் வரலாறும் தெரிந்த
பொறுப்பான மக்களே !!! சொல்லுங்கள் உங்கள் கருத்தை:

நமது நாட்டில் குற்றவாளிகள் " கொற்றவர்" ஆகலாமா?

ஓரிரு நாட்களுக்கு முன் நமது பாராளுமன்றம் ஒரு
சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது - அது
"சிறையில் இருக்கும் அரசியல்வாதி சிறையில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிடலாம் என்பதுதான்

இது எந்த விதத்தில் தர்மம் ஆகும்? சட்டம் தெரிந்தவர்கள் என் சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள் !!

கோவலனை கள்வன் என்று தவறாக தீர்பளித்து கொன்றுவிட்டோம் என்றறிந்த பாண்டியமன்னன்
அடுத்த நொடியில் தன் உயிர் நீத்தான். அங்கே நீதி உயிர்பெற்றது. தன் தீர்ப்பு தவறு என்றுணர்ந்த தன்மானமுள்ள அரசன் உயிர் துறந்து உயர்ந்து நின்றான்.

பசுவின் கன்றை தேரேற்றி கொன்ற மைந்தனை அதே தேர்க்காலில் இட்டு கொன்ற நீதி அரசர்கள் வாழ்ந்த புண்ணிய நாடிது.

பொது வாழ்வில் ஒழுக்குமற்ற செயல் புரிந்தவரை சிறையிலடைப்பது சிறந்த நீதி, அதுவே தர்மம்.
அந்த ஒழுக்கமில்லா மனிதர் இந்த நாட்டின் மக்கள் பிரதிநிதியாக நாடாளும் பொறுப்பை ஏற்க தகுதியுள்ளவரா ?

சட்டத்தின் கைகளை கட்டிப்போட இன்னொரு சட்டம் இயற்றுவதா ?

குற்றவாளிகள் "கொற்றவர்" ஆனால், நாளை தீவிரவாதிகள் அவர்களின் " தளபதிகள்" ஆக மாட்டார்களா?

யாரேனும் பதில் சொல்லுங்களேன் ?

இது சட்டத் திருத்தமா ? அல்லது ..
சுயநல திட்டமா?
அல்லது ...
அனைத்து அரசியலாரும் சேர்ந்து செய்யும் கூட்டு சதித்திட்டமா ?

சொல்லுங்கள் சட்ட மேதைகளே !!!

எழுதியவர் : ஜ. கி. ஆதி (8-Sep-13, 10:11 pm)
சேர்த்தது : ஜ. கி. ஆதி நாராயணன்
பார்வை : 85

மேலே