என்ன பாவம் செய்தோம்
![](https://eluthu.com/images/loading.gif)
கட்டினான் கல்லணை
கரிகால் தமிழன்
அனைவரும் குளிர்ந்து மகிழ்ந்திட...!
கட்டினான் தஞ்சை பெரிய கோவிலை
ராஜராஜசோழன் நிமிர்ந்து பார்க்கும் அழகும்
கோபுரமும் நிமிர்ந்து அழகியலாக...!
மனமெல்லாம் கவர்ந்து இழுக்கின்றது
தமிழர் மனம் மகிழவும் வாழ்த்தவும்
மாமல்லபுரத்து சிற்பங்களும்ஓவியங்களும்...!
வள்ளுவனின் வானுயரச் சிலை
வானம் தொட்டு எழில் கொஞ்சும்
வான் பாராட்டும் வையகம் முழுதும் ...!
கடல் கடந்தும் பேசுகிறது
தமிழனின் கொஞ்சும் தமிழ் மொழியில்
கப்பலோட்டியத் தமிழனின் புகழ்...!
ஈழத்தில் கண்டக் காட்சிகளை சொல்லவோ
எழுதவும் முடியாமல் தன் வாழ்வை
முடிக்கப் போகும் உயிரற்றப் பிணங்கள்...1
வானம் பொழிகிறது ரத்த மழை
சிங்கள அரக்கர்களை
அழிக்கவும் கொழுத்தவும்
கைகள் கால்கள் இல்லாமல் ....!
இத்தனை சாதனைகள் படைத்தும்
நம் தமிழினமும் தண்ணீர் பஞ்சமும்
பிரச்சனைகள் தீராது தீராமல் என்ன பாவம் செய்தோமோ...?