, நன்றி நட்புகளே...
கல்லூரியில் துளிர்த்த நட்புசெடி நாள்தோறும் வளர்ந்து
துளிர்விட்ட நேரத்தில் நான்காண்டுகள் மாயமாகிப்போனது.
பணி நிமித்தமாய் வாழ்வுப்பயணம் தொடர
சந்திப்புகள் அரிதாகி போயின கால ஓட்டத்தில்.
குடும்பத்திற்கும் வேலைக்குமாய் வாக்கப்பட்ட வாழ்வில்
குறிஞ்சி மலராய் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து
மகத்தான நாள் மலர்ந்தது அனைவரும் ஒன்றாய் சந்தித்திட...
சாண்டீஸ் (sandeez ) அணியின் சந்திப்பு மகிழ்வுடனே.
நான்கு சுவற்றின் உள்ளே நான்காண்டு நினைவுகள் தூசு தட்டப்பட்டன விடியவிடிய.
மலரும் நினைவுகளால் மதிமயங்கி சிரித்து மகிழ்ந்தோம்.
ஒவ்வொரு நொடியும் வீணடிக்கப் படவில்லை அன்று முதன்முறையாய்..
இன்னுமோர் நாள் இதுபோல் கிட்டாதோ என்ற ஏக்கத்துடனே விடிந்தது விடியல்
விடைபெறும் தருணம் வெளியில் மகிழ்ச்சியை காட்டிக்கொண்டாலும்
மனதார பிரிவுரணம் மென்மையாய் , நன்றி நட்புகளே...

