பிறவிப்பயன்
இருட்டறையில் பயந்து ..!
இரத்ததில் மூழ்கி...!
வலியால் துடித்து ...!
அவளை உதைத்து...!
விளைவு
என்
பிறப்பு...!
என் அழுகை
பலரின் சந்தோசம்
-பிறப்பு
என் மௌனம்
பலரின் அழுகை
-இறப்பு
இதற்கிடையில் உறவினர் அல்லாத
ஒருவரேனும் என்னால் பயனடைந்தால் ...!
அதுவே என் பிறவிப்பயன் ...!