என் இதயம் சொல்லும் கதை ....
அன்பே
உனக்காய் மட்டுமே
நான் வாழ்கிறேன்
உன் புன்னகையே
நான் சூரிய உதயமாய் காண்கிறேன்
என்னை தீ இட்டு எரித்தாலும்
உன் இருளை விளக்கும் மெழுகாய்
நான் ஒளிர்வேன் ...
எனக்கு ஒரே ஒருநாள்
ஆயுள் தா
அது போதும்
அப்போதும்
உன்னை நெருங்கவே ஆசைபடுவேன்
ஒரு ஈசலாய்
நீ சுட்டெரிக்கும் தீயாய் தெரிந்தும்
நீ
என்னை
சுனாமியாய் வந்து கொன்று விடு
அடை மழையாய் வந்து அடக்கிவிடு
ஆனால் எனக்கு தெரியும்
என்றாவது நீ
பனித்துளியாய் என் தோள்சாய்வாய் என்று
நீ
பட்டாம்பூச்சி உண்ணும் மலராயினும்
உன்ன நெருங்கவே ஆசை படுகிறேன்
நானும் ஒரு பட்டாம் பூச்சியாய்
எனக்கு மட்டுமே தெரியும்
உன்னிலும் அமுதங்கள் சுரக்கின்றன என்று
என்னை இவ்வுலகில் ஏற்காவிட்டாலும்
அன்பே .....
நான்
மரணித்தபின்
என் சடங்கில்
நீ ஒரே ஒரு கண்ணீர் துளி சிந்தி விடு
அதுபோதும் எனக்கு
உன் இதயமும் ஈரம் கொண்டது என்று
நானும் தெரிந்து கொள்வேன்
என் இறுதி ஆசையாக .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
