மூடியில்லா முகங்கள் (uncontralable men)
அன்னை மடியில் தவழ்ந்த குழந்தை
இரக்க மற்றவன் கையில் இறந்த சோகம்
ஒன்றும் அறியாப் பள்ளிக் குழந்தை
ஓடி ஒழிய இடம் தேடிய கொடுமை
செந்தமிழ் பாடும் வெள்ளைப் புறாக்கள்
செம்மை நிறமாய் மிதந்த துயரம்
ஈழம் என்ற உனையீன்ற தாயைக் காக்க
இன்னுயிர் தந்த நீயீன்ற பிள்ளைகள்..!!
மூடியில்லா முகங்களின் முகத்திரையைக் கழட்டி
மூச்சுக்காற்றை சுதந்திரக் காற்றாய் மாற்று
துயரங்களைத் துரத்தி அடிக்க மானம் காத்த
உன் வீரம் இனி உன் மண்ணையும் காக்கட்டும்...!!

