காதல் .

நீ
நான்
இரண்டையும்
நாம்
திண்டு தீர்க்கிறது !

வேர்களும்
பூக்கிறது !

கிளைகளும்
காய்க்கிறது !

இலைகள்
இசை மீட்ட
குயில்களின் கானம்
காதோடு கேட்கிறது !

கண் மூடி
காதல் வனத்தில்
நான் விழுந்தேன்

பாலைவனத்து
பருவ மழையாய்
அங்கும்

சிந்தாமல்
சிதறாமல்
என்னுள் நீ !

எழுதியவர் : பிரகாசக்கவி எம்.பீ அன்வர் (21-Sep-13, 11:03 am)
சேர்த்தது : prahasakkavi anwer
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே