நிழல் ஆவி

பாறைகள்
நடுக்கும்
குளிர்..!

பாதாள
இமை மூடிய
இருள்...!

மரங்களிடம்
வாள் சண்டையிடும்
ஆகாய காற்று...!

தொலை தூரத்தில்
இடி மின்னலாக
நாயின்
வெறித்தனமான
கூவள்..!

காற்றின்
துணையோடு
காதை
வருடும்..!
சங்கீத பாத
சலங்கை
சத்தமும்
ரத்த
வாடையும்...!

மெய்சிலிர்த்தேன்,
என்னுடலில்
இன்னொரு
நிழல் பட்டு...!

உணர்விழந்தேன்
உருகிய
பனிக்கட்டியாக...!

குருதியின்
சகதியில்
என் நைந்துபோன
உடல்...!

உதிர்ந்த
இலைமேல்
அமர்ந்து
என்னுயிர்
பறந்தது..!

எங்கோ
கேட்டது
மெல்லிய
குரல்...!


(அய்யோடா
இன்னைக்கும்
அப்பாவ
நனைச்சிடியா
என் மகனை
சாடும்
மனைவி...!)

*******கே.கே.விஸ்வநாதன்*****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (22-Sep-13, 9:26 pm)
பார்வை : 77

மேலே