விலை மாதர்

சதை விற்று
கற்கையொருத்தி எல்லைகோடு
தாண்டுகிறாள் மானங்கெட்டு
தாண்டவமாடுகிறாள் வெளிச்சம்போட்டு ……..

விலை அநியாயம் என்றாலும் -இவளின்
சேலை நாணயத்தோடு விலகுகிறது
காமத்திற்கு பஞ்சம அடைந்தவர்கள் –இந்த
காமக்கெழத்திக்கு கடன் சொல்கின்றனர்

விதி செய்த கொடுமையால்
பதியை பறிக்கொடுத்தாள்
மதிகொண்டு பிழைக்க வழியில்லையாம்
சதிக்கார ஆண் வர்க்கத்திடம் – இதுவே
கதியென்று வாழ்கிறாள் தன் மக்களோடு
மீதி வாழ்க்கையை
சேதியறிந்த சமுதாயம் சொல்கிறது
இவள் விபச்சாரியென்று …..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~> இரா.சந்தோஷ் குமார்



----------
என் நட்புக்களுக்கு :

இந்த படைப்பில் முன்பு இருந்த “சீதையொருத்தி ”என்ற சொல் என்னை பல சிந்தனைக்கு உள்ளாக்கியது.

சீதைக்கு என் நன்றி : சீதை எனக்கு பல விஷயங்களை சொல்லி கொடுத்து என் படைப்பில் இருந்து ஒதுங்கி கொண்டாள்.

ஒர் சொல்லை மாற்றி விதைக்க செய்வதால், பல மகிழ்ச்சிப்பூ பூத்து குலுங்கும் எனும் போது .. அதை
விட எனக்கு என்ன வேண்டும் !!

என் மானசீக இலக்கிய ஆசான்களின் உள்ளம் மகிழ்ந்தால் போதும்.

என் தமிழ் ஆளுமை, என் திறமை, என் தூய்மை:: இவற்றை நிரூபிக்க எனக்கு வேறு ஒர் களம் கிடைக்கும் , வேறு ஒர் படைப்பு கிடைக்கும் .

நன்றி தோழர்களே !!

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (22-Sep-13, 10:53 pm)
பார்வை : 599

மேலே