சில நிமிட சிராய்ப்புகள்
உறவு சொல்லும் உறவுக்கு
அறிவில்லா மனிதன் – தன்
ஆசையை தூதுவிட்டான் !
அட அறிவுக்கெட்டவனே – உன்
அன்புள்ள அத்தையடா நான் !
என்றது அந்த உறவு !
@@@
அலைகளே...!
உங்களைச்சொல்லி குற்றமில்லை..;
கடல் காதலிக்கும் மீன்கள்
அடிக்கடி செத்து மடிகின்றனவே !
@@@
என் நெஞ்சுக்குள் எழும் கவலைகள்
கண்ணுக்குள் விழும் கல்லாய் வலியூட்டூதே..!
அன்பானவளே !
அடைக்களம் புகும் என் ஆசைகளை
அலைபாய விட்டுவிடாமல்
திரைப்போட்டு காவியம் சொன்னால் என்ன ?
இனியவளே !
என் மனது இன்னும் தேடுவது
உன் மனதை மட்டும்தான் !
@@@
உயிரைக்கேள் தருகிறேன்
உடலைக்கேள் கொடுக்கிறேன்
ஆனால்
கண்களை மட்டும் கேட்காதே !
ஏனெனில் ?
அதில்தான் உன் குடியிருப்பு !
@@@
உனது
ஆறடி கூந்தலின் அதிசயத்தை
ஆராய விரும்பி – அனுதினமும்
ஆலயவாசல்களில் தவம்கிடக்கிறேன்!
ஆனால் என்னுள் ஓர் அச்சம் !
எங்கே நீ என் முகத்தில்
எச்சில் துப்பிடுவாயோ என்று ?
@@@
காதல் மலர்ந்த சந்தோஷத்தில்
கண்களில் பனி நீர் சாரல் !
காதலி கழுத்தறுத்து போனபோது
கண்ணில் சோக நீர்த்துளிகள்
@@@
வியர்வையில்
நனைந்த விக்ரகங்கள்
உண்மையில் விலைமதிப்பற்றவை !
@@@
நிலவே!
நிழலைக்கேள்
அது சொல்லும்
நான் கூட அழகென்று !
@@@
பொன்மாலை பொழுதில்
செங்கதிரோனை தேடினேன்
கண்ணுக்கு தென்படவில்லை:
காரணம் யாதென
கனிகை ஒருவளிடம் வினவினேன்
கற்பழிக்க அழைத்தது
முடியாது என்றேன் என்றாள் !
@@@
கோப்பு பிடிக்கும் என் விரல்களை
கோப்பை பிடிக்க விடுவதா ?
கோதையே !
உன் கோபத்தை கொள்ளியிட்டு
என் காதலை கொள்ளை அடி !
@@@
நிலவே !
தேடினேன் உன்னை அமாவாசையன்று!
நீ கிட்டவில்லை;
நீ மட்டும் அன்று கிடைத்திருந்தால்
அந்த கும்மிருட்டில் என்னால்
உன் கற்புக்கு உத்திரவாதம்
தந்திருக்க முடியாமல் போயிருக்கும் !
@@@
என் நெஞ்சிற்குள்
விரல் வைத்து சுட்ட நீ
கண்களுக்கு மட்டும் விருந்தளிப்பதேன்?
காதலில் கடுமை காட்டாதவன் நானென்றா !
அன்பை ஆழ்த்திவிட்டு
அவஸ்த்தைப் படுகின்ற எனக்கு
அழிவை கொடேன் கடவுளே !
@@@
என்னுயிரில்
உன்னுயிரை புதைத்து வைத்தேன்
ஜாதி மழை பெய்து
அனைத்தையும் அடித்து சென்றுவிட்டது!
@@@
என்னை சிந்திக்க வைத்து
கிளுகிளுப்பூட்டிய இதயமே
என் மேல் அன்பை வைத்து
மாயமாய் மறைந்த மர்மம்தான் என்ன ?
@@@
பேருந்தில் உல்லாச பயணம்
ஓர் புஷ்பக விமானம் !
காரணம் ?
அதில் ஓர்
அழகு சிலையின் தரிசனம் !
@@@
கடைசி காலம்
காதல் பேசப்போன பறவைகள்
இனி சந்திக்கப்போவது எப்போது ?
@@@
ப்ரியா !
பிரிந்துவிட்டோம் என்ற கவலையா ?
பிரிந்துச் சென்றாலும்
எப்போதும் ப்ரியமுடன்
இருப்பவர்கள்தானே நாமிருவரும் !
@@@
நீ போகின்ற பாதையில்
மரணம் ஒளிந்துள்ளதோ ?
உனை பார்க்கும் பார்வைகள்
எனை அணுஅணுவாய் கொள்கிறதே !
@@@
துருவ நட்சத்திரத்தை காண துடிப்பவள்
ஏனிந்த
பருவ நட்சத்திரத்தை பார்க்க மறுக்கிறாள் ?
நானென்ன
அக்கினி நட்சத்திரமா அவளை எரித்துவிட ?
@@@
மண்ணில் நடப்பவளை
கண்ணில் பதிய வைத்தேன்
மனம் வேண்டும் என்றாள்
எம் மனம் என்றேன்
திருமணம் என்றாள் !
@@@
மன்னவனை மணந்து
அன்னியனை காதலிப்பவளே!
மானம் கெட்ட உனக்கு
மாங்கல்யம் எதற்கு ?
@@@
ஆற்றங்கரையில் அடுப்பெரித்து
மாரியம்மனுக்கு பொங்கள் வைப்பவளே
உன்மேல் காதல் ஊற்றெடுக்கும் என் நெஞ்சில்
பால் வார்க்கும் நாள் என்றோ ?
நின்று பதில் சொல்லி போவாயோ !
@@@
பூ கட்டும் பூவே !
உன் விரலுக்கு நாராக
நான் வாரேன் !
@@@
பெரும் ஏக்கத்தில் விட்டுச்சென்றவள்
பாதி தூக்கத்தில் வந்து எழுப்பினாள்;
விழித்துப் பார்த்தால் கனவு
அது ஒர் மறக்க முடியாத இரவு !
@@@
காதலை தூதுவிட
கவிதைகள் உதவின;
ஆனால்
மோதல்கள் மூண்டன
ஜாதியின் வழியே !
ஒழித்துக்கட்ட ஆளில்லையே
என்ன செய்ய !
@@@
இடையில் பிரிந்த இன்ப நிலா
மீண்டும் இணைய தூது விடுகிறது
இதோ அதற்கு என் மறு தூது
இனி சந்தித்தால்
சம்சாரமாகத்தான் சந்திப்பேன்
இடையில்
சமாசாரங்களுக்கு இடமில்லை.
@@@
தென்றலென பறந்து வந்தாள்
தேனிதழில் சுவை தந்தாள்
வண்டொன்று உண்டென்று
கண்டுக்கொண்ட செங்காந்தாள் !
@@@
அடக்கமில்லா ஆரணங்கே
அதிகம் அளட்டாதே
அதுவே உன்னழகுக்கு
அவதூறு விளைவிக்கும்;
என்னுடன்
உரசிக்கொண்டே இருந்தால்தான்
உனக்கு சுகமென்றால்
அதற்கு இது சரியான இடமில்லை;
மாநகரப் பேரூந்துதானே
பேதமில்லை என்கிறாயா ?
உன் கூற்று உண்மைதான் !
ஆனால் சிறு சாதம் அளவேனும்
தவறு நடந்தாலும்
தர்ம அடி விழும் ஜாக்கிறதை !
@@@
பாவையே !
பாதம் படுகிறதே என்று
பயந்து விடாதே!
பாதகன் நானில்லை;
பேத மாற்றங்கள்
மக்கள் நெரிசல்மிக்க
மாநகர பேரூந்துகளில்
கடைபிடிக்க முடிவதில்லை.
@@@
தண்டு கரங்களில்
தங்க வளையல்கள் இல்லை;
இருப்பது இரும்புதான் என்றாலும்
இதயம் ஏற்றுக்கொண்டால்
இரும்பும், தங்கம்தான் தங்கமே !
@@@
நர்த்தகியே !
உன் பாத விரல்கள்
பரதம் பயிலும்போது
பாளீஷ் போடாத பளிங்குத்தரை
தானாகவே
பாளீஷ் போட்டுக்கொள்கிறது.
***********************************************

