உறவு ஒன்று ஏங்குகிறது ....
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணீருக்கு பதில்?
இன்னும் சில காலம் தான்....
ஆம் சில காலம் தான் ....
இனம் என்று ஒன்று இருந்தால் தானே கண்ணீர் சிந்த ?
விரைவில்
தமிழகத்திலும் ஒரு இனம் அழியப்போகிறது ...
அணுஉலை கதிர்வீச்சால் கொஞ்சமும்
அந்நியனின் தோட்டாவால் கொஞ்சமுமாய்
ஒரு இனம் அழியப்போகிறது ....
யார் இருக்கிறார் இவனுக்காய் குரல் கொடுக்க !!!!
தேர்தல் வந்தால் தானே
இப்படி ஒரு இனம் உண்டு என்பதே இங்கு பலருக்கு தெரியும் !!!
வங்க கடல் இன்னும் சிலநாட்களில்
செங்கடலாய் மாறிவிடும் !!!
அமைதியாய் இருங்கள் ....
அப்போதும்
ரத்தத்தில் இருந்து எங்கள் பிள்ளைகள்
மீன்களை பிடிப்பார்கள் உங்கள் பசிதீர்க்க!!
கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்துபவர்க்காக பேச ஆயிரம் பேர் உண்டு!
கடலே எங்கள் கண்ணீரால் ஆனதுதான் என்று தெரிந்தும் ...
எமக்காய் உண்மையாய் பேச ஒரு நாதியும் இல்லை இந்த நாட்டில் ....
பேசாமல் கடலுக்கு அப்பால் பிறந்திருக்கலாமோ ?
உறவு ஒன்று ஏங்குகிறது
விடை தேடி ...உயிர் பயத்தில்...
கண்ணீர் சிந்தி ...கடலின் நடுவில் ....