உலகமும் வாழ்த்திடும்

​சிந்தையில் ஊற்றெடுக்கும்
சீர்மிகு சிந்தனைகளை
தீந்தமிழ் சொல்லெடுத்து
பைந்தமிழ் ​பாமாலையாய்
வாசமிகு பூமாலையாய்
சமுதாய அக்கறையுடன்
சீர்திருத்தும் எண்ணமுடன்
பகுத்தறிவுடன் தொகுத்திட்டு
எண்ணத்தில் எழுபவைகளை
ஏர்பூட்டிய காளைகளாய்
எழுத்து தளத்தில் உழுதிட்டால்
விந்தைமிகு விளைச்சலால்
சந்தையில் விலைபோகும்
வியத்தகு பயனும்தரும்
உள்ளமும் குளிர்ந்திடும்
உலகமும் வாழ்த்திடும்
பிறந்திட்ட பயன்தன்னை
நாமும் அடைந்திடலாம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Sep-13, 11:29 am)
பார்வை : 101

மேலே