நட்பில் நீ எந்த வகை

சுயநலவாதிகள்
சந்தர்ப்பவாதிகளாய்
சிறகு விரிக்கிறார்கள்
சுயங்களைத் தொலைத்துவிட்டு....!

நட்பாய் இருக்கத் தெரியாமல்
நயமின்றிச் சுடுகிறார்கள்
வார்த்தைகளை எறிகணையாய்
நீடித்திருக்கும் வடுப்போல ......!

ஆரம்பத்தில் இனித்து
காலப்போக்கில் கசக்கும்
அடிக் கரும்பிலிருந்து
நுனி நோக்கிய சுவையா....!

ஆரம்பத்தில் கசந்து
காலப்போக்கில் இனிக்கும்
நுனிக் கரும்பிலிருந்து
அடி நோக்கிய சுவையா......!

நட்பில் எந்தவகை நீயென்று
இப்போதே தீர்மானித்துக்கொள்...
குறுகிய நட்பா அன்றி
நீடித்த நட்பாவென்று............!

நேசித்த நண்பனுக்கு
எதிரியாக இருந்தாலும்
துரோகியாக மாற
ஒருபோதும் நினைக்காதே...!

இன்றைக்கு நீ விதைப்பது
நாளை அறுவடையாகும்
புரிந்துகொண்டு பதிலளி
நட்பில் நீ எந்த வகை .....!!
---------------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (26-Sep-13, 1:52 am)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 329

மேலே