உனக்கான காத்திருப்பு...!!!

வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
தடயம் சொல்வது உன் பெயர் தான்...
போகும் பாதையில் நின்று பார்க்கிறேன்
தடயம் தந்திட உன் கால்கள் இல்லையே...

விண்ணை எட்டி பிடிக்க,
நிலவை கட்டி அணைக்க,
தோழி மட்டும் போதும் -உன் போல்
தோழி மட்டும் போதும்!!

எங்கு சென்று கற்று கொள்வேன்
உன் நினைவுகளை மறப்பதற்கு...
என்னை தழுவும் தென்றல் காற்றும்
உன் நினைவைத் தானே தருகின்றது...

ஓடும் நதியில் கால்கள் நனைத்தது,
ஒன்றாய் சேர்ந்து நிலவை ரசித்தது,
பாடல் பாட மெட்டு அமைத்தது,
புது கதை கூறி சிரித்து மகிழ்ந்தது...

சாலை கடக்க பிடித்த கைகள்,
கண்கள் துடைக்க வந்த விரல்கள்,
நம்பிக்கை தந்த அந்த பார்வைகள்,
தைரியம் தந்த சின்ன வார்த்தைகள்...

மறக்கும் நிலையில் எதுவும் இல்லை,
உன்னை கைவிடும் நிலையில் மனமும் இல்லை...
உதிரம் உறையும் நிமிடம் வரையிலும்,
உன் நினைவோடு நிச்சயம் காத்திருப்பேன்...!!

நிலவுக்கு காத்திருக்கும் அல்லியும்,
வார்த்தைக்கு காத்திருக்கும் கவிஞனும்,
விடியலுக்கு காத்திருக்கும் இரவும்,
என்னை போல் காத்திருக்க முடியாது..

வழி மீது விழி வைத்து,
விழியோடு வலி வைத்து,
மீண்டும் கை கோர்க்க வருவாய் என...
உனக்காக காத்து இருக்கின்றேன்....!!!

எழுதியவர் : சகா(ஆர்த்தி) (25-Sep-13, 11:33 pm)
பார்வை : 312

மேலே