அன்பு தோழி தமிழின் தோழிக்கு !!!

தோழியே எங்கள்
தமிழின் தோழியே !!!

ஈடில்லா தமிழ் காதலிலும்
ஈழத்து இனப் பற்றிலும் எனை
ஈர்த்த என் மறக்குடி
ஈழத்து ஈகையே !!

மறத்தமிழ் மங்கையே
மாடப் புறப்போல சிறகடித்து
மனதை மயக்கி அன்பிலே
மலர்ந்தாய் தோழியாக !!

முக்கடல் தாண்டியும்
முப்பொழுதும் கவிப் பாடி
முத்தமிழுக்கோர் முகவரியான
முகமறியா முத்தே - நீ !!

செவ்விதழில் கவிப்பாடி
செழிப்பாக வளர்த்தாய் தமிழை
செந்தமிழ் கவிதையிலே
சிறைப்பிடித்தாய் தமிழுள்ளங்களை !!

திண்ணிய நெஞ்சம் கொண்டு
தீயாய் கவிதையெழுதும்
திறன்படைத்த நீ என்
திராவிட ரத்தமல்லவா !!

அர்த்தமுள்ள கருத்துரைத்து
அறிவியிலே சிறந்து நல்ல
அறிவுரையிட்டு ஆக்கத்திற்கு
அடிகோலும் அறிவுச் சிகரமே !!

பூலோக தேவதை நீ அழகினிலே
பூட்டிவிட்டேன் தோழியாக என்னுள்
புனைப்பெயரறிந்து உன் முழுப்
பெயரறியாத பேசாத தோழியாம் நான் !!

இப்படிக்கு
உன் நட்பு பாசம் அன்பு சோகம் சுகம் எல்லாவற்றிலும் உன்னுடன் இருக்கும்
உன் தமிழ் ரத்தம் சுதா

எழுதியவர் : சுதா (26-Sep-13, 5:12 pm)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 567

மேலே