தேசம் துலைத்தொம்
தேசம் தொலச்ச நாங்கதான்
பாசம் இன்னும் தொலைக்கல
வந்தொம் பல கனவுல
வாழுரோம் உங்க நினைவுல
(நல்லா சாப்பிடுபா
வாரதுக்கு ஒரு தடவயாவது போன் பன்னு
யாரொடயும் சண்ட பொடாத
பணத்தயெல்லாம் பத்திரமா வச்சிகொ
ரொம்ப கஷ்டமா இருந்தா உடனெ திரும்பி வந்துரு
பணம் போனா போகுது) என்று சொல்லும்
தேசம் தொலச்ச நாங்கதான்
பாசம் இன்னும் தொலைக்கல
தனி தனியே வந்தொமெ
தாய் மொழியில் இனைந்தொமெ
அண்ண தம்பி என்றோமெ
அன்பை அள்ளி இரைத்தொமெ
கூட்டாசோறு ஆக்கியெ
குடும்பமாக வாழுரொம்
கூட்டதுல கண்ணமூடி
குழந்தைகல நீனைக்கிரேன்
தேசம் தொலச்ச நாங்கதான்
பாசம் இன்னும் தொலைக்கல
கஷ்டபட்டு சம்பாதிச்சு
காசனப்ப முடியல
வரிசையில நின்னு நின்னு
வலிக்குதுங்க காலெல்லாம்
அரபிக்காரன் அடிக்கிறான்
அதட்டிக்கேட்க ஆலில்ல
அப்பகூட கண்ணமூடி
அம்மா உண்ண நீனைக்குறேன்
தேசம் தொலச்ச நாங்கதான்
பாசம் இன்னும் தொலைக்கல
ஆசை பட்ட எதையுமெ
கேட்டு வாங்க முடியல
அரபு பாசை தெரியல
அமைதியாகி நிக்கிறேன்
உமையாகி நடிக்கிறேன்
உள்ளுகுள்ள அழுகிறேன்
அப்பகூட கண்ணமூடி
கண்ணே உண்ண நினைக்குறேன்
தேசம் தொலச்ச நாங்கதான்
பாசம் இன்னும் தொலைக்கல
வெட்ட வெளி வெயிலிலெ
இரத்தம் சுண்ட உழைக்கிறேன்
அந்தியில படுதவன்
அடுத்த நாள் எழவில்ல
அஞ்சி அஞ்சி வாழுறேன்
ஆண்டவன வேண்டுறேன்
அப்பகூட கண்ணமூடி
அழகி உண்ண நினக்கிறேன்
தேசம் தொலச்ச நாங்கதான்
பாசம் இன்னும் தொலைக்கல