காதல் பார்வை

இரு கண்கள் கொண்டிருந்தது காரணமா
ஆணாகப் பிறந்தது காரணமா
தெரியவில்லை.
எனக்குள் இருவர்!

ஒருவன்
நீ இருக்கும் போது மட்டும்
பார்வை பெற்றவனாய் இருந்தான்
இன்னொருவன்
நீ இல்லாத போது
பார்வை பெற்றிருந்தான்

ஒருவன்
சிறிய வட்டத்திற்குள்
தன்னை அடக்கிக்கொண்டவனாய் இருந்தான்
இன்னொருவன்
வரைமுறை அற்றவனாய் இருந்தான்

நீ இல்லாத சமயத்தில்
பார்க்க முடியாதவனாய் இருந்தவன்
பார்வை அற்றவனாய் இருந்திருக்கவில்லை
நீ இல்லாத சமயத்தில்
அவன் பார்வை
உன் நினைவுகளால் கட்டப்பட்டிருந்தது
அவனின் அந்த கட்டு
லேசான சமயத்திலும்
அவனின் பார்வை
எதை கண்ட போதிலும்
உன் பிம்பத்தையே பதிவு செய்தது

உன்னைப் பார்க்க முடியாதவனாய் இருந்தவனின்
பார்வையில் குறைபாடு
என்று எதுவும் இல்லை
நீ இருக்கும் சமயத்தில்
அவன் மூளை செயலற்று போனது
உணர்ச்சிகளை மிகுதியாக கொண்டிருந்த அவன்
உணர்ச்சியற்ற ஜடமானான்

உன்னைப் பார்க்க முடிந்தவனாய் இருந்தவன்
உன்னைப் பார்க்கும் போது
வெட்கம் கொண்டு திரும்பிக் கொண்டான்
அவன் கண்கள் உன் பக்கமாக
இல்லாத சமயங்களிலும்
அவன் பார்வையில்
நீயே இருந்தாய்

அவன்
உன்னைப் பார்த்து தெரிந்து கொள்ளவில்லை
உன் இருப்பை உணர்ந்து தெரிந்து கொண்டான்

வரைமுறை இல்லாமல் இருந்தவன்
இந்த வேற்றுமையை
கண்டுகொள்ளதவனாய் இருந்தான்
உன்னைப் பார்க்கும் பாக்கியம் பெற்றிருந்தவன்
இந்த வேற்றுமையை
கண்டு குழம்பிப் போனான்

இவர்களின் மத்தியில்
இவர்கள் ஒன்று சேரும் நாளை
உன் மௌனத்தில் ஒளிந்திருக்கும்
அந்த நாளை
எதிர்நோக்கிக்கொண்டு நான்

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (3-Oct-13, 12:57 pm)
Tanglish : kaadhal parvai
பார்வை : 89

மேலே