எனக்காக நீ..........
நான் வருத்தத்தில்
சாய்ந்து கொள்ள
உன் பரந்த தோள்கள் இருக்கு.....
என் கண்ணீர் துடைக்க
உன் வீரம் மிக்க
விரல்கள் இருக்கு...
ஆறுதல் சொல்ல
உன் கம்பீரம் நிறைந்த
குரல் இருக்கு.....
வேதனையான என் நேரம் தவிர்க்க
என் கூந்தல் கோதி...
தட்டிக் கொடுக்க
உன் கைகள்....
என் எல்லா சுமைகளையும் தாங்கி
என்னை வழி நடத்தி செல்ல
உன் திடமான பாதங்கள் இருக்கு....
இதையெல்லாம் செய்வதற்கு
உனக்கு நல்ல மனம் இருக்கு....
இங்கே என் உடல் பாகங்களுக்கு
என்ன வேலை இருக்கு...
தெரியவில்லையே...........