இயற்கையின் காதல் ....!!
தெள்ளிய நீரோடையே ...!
துள்ளிப் பாயும் ஓட்டமெங்கே ....?
கள்ளியே ...!!
இளஞ்சிவப்பு மலர்களின்
வனப்பில் மயங்கி
இதயம் ஈந்தாயோ ...?
உதயமானது காதலோ ...?
சலனமற்று நின்று
அழகாய் படம் பிடித்து
பதுக்கிக் கொண்டாயே உன்னுள் !
யாரேனும் கவர்ந்திடுவரோ
என்ற பயமோ ...?
கண்ணேறு பட்டுவிடுமோ
என்ற ஆதங்கமோ ......??