------------^---------^-----லக்ஷ்மி நகர் ------^------^

மூடிய சமூகமென முழங்கால்களைக் காட்டி
முறுவலித்துச் சொன்ன முத்தழகி பேச்சினை
மூடாத வாயுடன் திரையினில் ரசித்து
முதலில் சென்றிட முடிவும் எடுத்தேன்;
புதிய வீட்டினை கட்டும் ஆசையில்
அதிரடித் தள்ளுபடி அர்ப்பணம் என்று
புரியாத ஒன்றைப் புரிந்ததாய் காட்டி
அறியாமல் ஆசை வலையில் விழுந்தேன்.

நகரத்தில் இருந்து அரை கிலோ மீட்டர்
தூரமே என்று சொன்னதும் பொய்யே
நானே வாகனம் ஓட்டிச் சென்றதில்
தானே புரிந்தது பல கல் தொலைவு;
மனையது இதுதானென மனைவி காட்டிய
மண்ணில் மண்ணில்லை பாறாங்கற்கள்
எனையந்த காட்சி கணையாய் தாக்க
சுனையில் விழுந்த சுரும்பென ஆனேன்.

அக்கம் பக்கம் சுற்றிப் பார்க்கையில்
அருகில் எவரும் தட்டுப் படவில்லை
விக்கல் எடுத்து தண்ணீர் தேடிட
வாகனம் அருகில் ஒருவன் இருந்தான்.
சிறுவன் அவனோ சிரித்துச் சொன்னான்
வறுமையில் இருந்தும் வாங்கியது தவறு
இந்த இடத்தை ஏற்கெனவே மூவர்
வந்து வாங்கி ஏமாந்து போயினர்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (9-Oct-13, 2:59 pm)
பார்வை : 47

மேலே