நட்பு புராணம் !
குறிப்பு:-) மணக்கும் முல்லையை
குணத்தால் வென்றவர் ! நிறை
குணத்தால் எங்கள் அகம் வென்றவர் ! திரு kppayya
அவர்கள் மீதுள்ள நட்பினால் மலர்வது ! )
மன்னுடல் நோகா பொன்னுரை தந்தவனே
மனதை மயக்கும் மந்திரம் கற்றாயோ ?
வானமதை கீழிறக்கும் தந்திரம் தெரிந்தவனே !
நானதை சொல்லுதற்கு காரணம் பலஉண்டு !
அழகே ! தமிழே ! அறமே ! - நீ
அமிழ்தை தரும் கற்பக தருவோ ?
தலைக்கனம் இல்லா இலக்கணமே !
ஒன்பான் சுவை தோற்கும் உன்னில்
எழிமை உனது இனிய தோற்றம் !
இனிமைதான் உனது வேதம் ! - நீ
இசைப்பது அன்பின் ராகமோ ?
அய்யா என்றே நின்றிருக்க - நல
அம்மாவின் அருளை பொழிகின்றாய் !
எங்கோ பூத்தம் தளம் வந்து
என (ம)க்குள் மனத்தே சிறக்கின்றாய் !
தமிழ்த்தேன் தருவாய் நீயே ! - அதை
அமிழ்தாய் தா என்றும் நலமே !
ஈடில்லா உந்தன் அன்பில் எனையும்
கூட்டில் ஒன்றாய் சேர்த்ததற்கு - என்
பாட்டில் வைத்தே வாழ்த்துகின்றேன் !
வாழ்க பல்லாண்டு வாழும் காலமும்
நாயன் அருள் துணைகொண்டு - உன்
நாமம் சிறக்க வாழ்வீர் அய்யா !
நட்பில் nashe

