இனந்ததெரியா ஏக்கம்

மலைவிட்டு இறங்கி வந்து மணம்பரப்பும்
மந்திகளாய் குதித்தோடி இனம் சேர்க்கும்
கலைஎழுதும் கருவியென முகில்கூட்டம் நடமாடும்
அலைந்தாடும் சிறுபுள்ளும் அருவியில் குதித்தாடும்
மழைதூவும் சாரல்பட்டு மரக் கிளையில்
சிறு குருவி இளைப்பாற , இரைதேடும் மிருகமாய்
இருவிழியும் வேட்டைஆடும்; வண்டாடும் மலர்சூடி
கார்குழலும் பாய்விரிக்கும்,கண் இமையில்
இரவோடும் கலந்தினிமை உறவாடும் ; கலந்திட்ட
உறவோடு கண் இமையும் பூ பூக்கும் :
பணிதடவும் இலைக்கூட்டம் பரிதிதொட உதிர்த்துவிடும்
உதறிவிட சிதறி விடும் மணர்துகளாய் பொழு தழிய
வணமுதறி மனஞ்சுற்றும் பறவை எல்லாம்
கனிந்திட்ட பழமாகி கறார் செய்யும்
இனந் தெரியா ஏகாந்தம் ய்துவென்று கூச்சலிட்டே...

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி-6 (12-Oct-13, 1:47 pm)
பார்வை : 65

மேலே