ஒன்பது இரவுகள்
ஒன்பது இரவுகள்
அற்புதமான இரவுகள்
மாலை கவியும் நேரம்
பொம்மைகளின கொண்டாட்டம்
இறைவனின் அருள் குவிய
இறைவிகளின் அன்பு ததும்ப
தலைவர்களின் கடமை விரிய
கடை விரித்து வர்த்தகம் பெருக
கோலாட்டம் ஒங்க
நாட்டியம் துவங்க
பூங்காவும், மைதானமும்
அழகாகப் பொருந்த
பூக்களும் மரங்களும்
கவாச்சியாக்த் துலங்க
ஒன்பது நாட்களும்
இறை உணர்ச்சி மேலோங்க
பெண்களும் குழந்தைகளும்
தாம்பூலம் பெற்று
வினயமாக வினவி
கலந்து பாட்டும்
ஆடலும் கேளிக்கையும்
மனமுருகி நெகிழ்ந்து
எல்லாம் வல்ல இறைவனுடன் உறவாடி
மகிழ்வுடன் வாழும் இனிமை
வேறு எங்கும் கண்டில்லோன்
இந்திய நாட்டின் தனி வளமை
தனிப்பட்ட சிறப்பு