முதல் வணக்கம்!!
இது என் முதல் வணக்கம்.
எழுதுவேன் தொடர் வணக்கம்.
வணக்கமே அறிமுகம்.
வளர்ச்சிக்கு விண்ணப்பம்.
அன்னைக்கும் மண்ணுக்கும்
அழுகையாய் முதல் வணக்கம்,
எந்தைக்கும் முந்தைக்கும்
இளஞ் சிரிப்பு முதல் வணக்கம்.
பேசிய முதல் பேச்சாம்
தேசிய சொல்லாச்சாம்.
அம்மாதான் முதல் வணக்கம்.
அகரத்தமிழ் முதல் வணக்கம்.
அ எனத் தொடங்கும் போது
ஆசிரியர்க்கு முதல் வணக்கம்.
இ எனத் தொடரும் போது
இறைவனுக்கு முதல் வணக்கம்.
எழுதவும் பழகவும் எழுத்தாம்
இலக்கியப் பள்ளி வந்தேன்.
இக்கவிதை முதல் வணக்கம்.
ஏற்று எம்மை வளர்த்திடுவீர்.
சபா கண்ணன் ராசா.பி.