தமிழன்னை
ஆயிரமாயிரம் வருடங்கள் நாவில்
ஆனந்தமாய் தவழ்ந்தவள் - அவள்
ஆயுள் முழுக்க என்னை பதமாக்கி
ஆசிர்வதித்தவள் - அவள்
அன்பாய் திகழ்பவள் அவள்
ஆன்றோர் இடத்தில் அறிவாய் - அவள்
உயர்ந்தோரிடமும் தன்னை
உயர்த்தனவர்களையும்
உரிமைக் கொண்டவள் - அவள்
அதிராத பேச்சும்
உதிராத சிரிப்பும் கொண்டவள் - அவள்
ஆயிரம் கோடி காலங்கள் - இன்னும்
ஆனந்தமாய் வாழ்பவள்